அரேபியன் ரெசிபி மொறுமொறுப்பான குனாஃபா செய்வது எப்படி?





அரேபியன் ரெசிபி மொறுமொறுப்பான குனாஃபா செய்வது எப்படி?

0

நம்மூர் பால்கோவாவைப் போல் காட்சியளிக்கும் இந்த இனிப்பு பாலின் கிரீமுடன் சோள மாவை கலந்து வெண்ணெயில் வேக வைத்து தயாரிக்கப்படுகிறது. 

அரேபியன் ரெசிபி மொறுமொறுப்பான குனாஃபா செய்வது எப்படி?
உலர் பருப்பு வகைகள் நிறைந்த இந்த இனிப்பு கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. 

கடந்த 2009-ம் ஆண்டு பாலஸ்தீன நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரே தட்டில் 1,765 கிலோ எடை கொண்ட குனாஃபாவை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது, குறிப்பிடத்தக்கது.

உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் செய்வது எப்படி?

இது பீட்சா இல்ல மோசரெல்லா சீஸ் மூலம் செய்யப்பட்ட மிருதுவான மற்றும் மொறுமொறுப்பான இனிப்பு உருகிய வெண்ணையில் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. 

இதற்கு கொனாபா, கனாஃபே மற்றும் நாஃபே போன்ற பல பெயர்கள் உள்ளன. சரி இனி வெர்மிசெல்லி கொண்டு அரேபியன் ரெசிபி மொறுமொறுப்பான குனாஃபா செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம். 

தேவையான பொருட்கள் : 

250 கிராம் வெர்மிசெல்லி உடைந்த 

வெண்ணெய் உருகியது - 200 கிராம் 

பிஸ்தா நறுக்கியது - 1/4 கப் 

குனாஃபா நிரப்ப :

பால் - 1 கப் 

கிரீம் - 1 கப் 

சோள மாவு - 1/4 கிலோ

ரோஸ் நீர் - 1 டீஸ்பூன் 

சீஸ் அரைத்தது - 1/2 கப் 

மொஸெரெல்லா சீஸ் அரைத்தது -1/2 கப் 

சர்க்கரை - 2 தேக்கரண்டி 

சர்க்கரை சிரப்பிற்கு:

தண்ணீர் - 1 கப் 

வெள்ளை சர்க்கரை - 1½ கப் 

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 

ரோஸ் நீர் - 1 டீஸ்பூன் 

சில்லி பிளேக்ஸ் தயார் செய்வது எப்படி?

செய்முறை

அரேபியன் ரெசிபி மொறுமொறுப்பான குனாஃபா செய்வது எப்படி?

ஒரு கிண்ணத்தில் வெர்மிசெல்லியை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை சிறு துண்டுகளாக உடைத்து உருகிய வெண்ணெய் ஊற்றி கைகளால் நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். 

சுவையான உருளைகிழங்கு பட்டாணி மசாலா செய்வது எப்படி?

பின்னர் ஒரு தனி கிண்ணத்தை எடுத்து பால் கிரீம் சர்க்கரை மற்றும் சோள மாவு சேர்க்கவும். அவற்றை நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். 

இப்போது தடிமனான பேனை அடுப்பில் வைத்து நாம் கலந்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி மெதுவாக சூடாக்கவும். 

அது சிறிது கெட்டியாகும் வரை ஒட்டிக் கொள்ளாமல் கலவையை கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். 

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்து விடவும். இப்போது இந்த கலவையில் சீஸ் மட்டும் மொஸெரெல்லா சீஸ் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 

சர்க்கரை சிரப் செய்முறை 

மற்றொரு பேனை எடுத்து தண்ணீர் சர்க்கரை சேர்த்து சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை கலக்க வேண்டும். 

இந்தப் பாகு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருந்து பின்னர் அவற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். 

நாட்டு சர்க்கரையில் சுவையான பீட்ரூட் அல்வா செய்வது எப்படி?

குனாஃபா செய்முறை

ஒரு பேக்கிங் பேனை எடுத்து அதில் மேலே சொன்ன வெர்மிசெல்லி கலவையை தேவையான அளவு ஊற்றி மட்டமாக வைத்துக் கொள்ளவும்.

இப்போது அந்த வெர்மிசெல்லி கலவையின் மேலே சீஸ் கலவையை ஊற்றி கரண்டியால் சமமாக அனைத்து இடத்திலும் பரப்பவும். 

பின்னர் மீதமுள்ள வெர்மிசெல்லி கலவையை எடுத்து சீஸ் அடுக்கு மேலே மற்றொரு அடுக்கை உருவாக்கவும். 

பின்னர் மீண்டும் உருகிய வெண்ணெய் கலவையைக் கொண்டு மேல் அடுக்கை உருவாக்கவும். அடுப்பை ஏற்றி அடுப்பில் 200 டிகிரி வரும் வரை அரை மணி நேரம் வைக்கவும். 

இந்த குனாஃபா மேற்பரப்பில் மொறுமொறுப்பாவும், நொறுங்கியதாகவும் மாறும் போது தயாராகி விட்டது என்று அர்த்தம். 

பின்னர் இந்த குனாஃபாவை அடுப்பிலிருந்து வெளியே எடுத்து அதன் மீது சர்க்கரை சிறப்பை ஊற்ற வேண்டும். 

பின்னர் பரிமாறுவதற்கு முன்பு பிஸ்தாவை கொண்டு அலங்கரித்து கடைசியாக பீசா அல்லது கேக் போல வெட்டி பரிமாறலாம்.

ஒரு உயிர் உருவாகும் ரகசியம் தெரியுமா?

குறிப்பு:

குனாஃபா செய்து முடித்தவுடன் அதனுடைய சூடு குறையத் தொடங்கும் அந்த சமயத்தில் அது அழுத்தமாக மாறி விடும். 

அதனை தடுக்க ரிக்கோட்டா அல்லது பன்னீர் போன்றவற்றை அதனுடன் சிறிது கலக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)