வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் இரும்பு சத்து கிடைக்கிறது. 

சுவையான தேங்காய் பால் அல்வா செய்வது எப்படி?

தேங்காய்ப் பாலில் உடலுக்கு நன்மை செய்யும் ஊட்டச் சத்துக்களும் நல்ல கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. மக்னீசியமும் கொழுப்பு அமிலங்களும் நிறைந்தது. 

தேங்காய் பால் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது.  

சிம்பிள் சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி?

தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது. 

அதோடு தேங்காய் மற்றும் தேங்காய்ப் பாலில் ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. சமையலில் தேங்காய் வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப் படுவதில்லை. 

சரி இனி தேங்காய் பால் கொண்டு சுவையான தேங்காய் பால் அல்வா செய்வது எப்படி?  என்பதை இங்கே பார்ப்போம். 

தேவையான பொருட்கள் :.

தேங்காய் - 1 பெரியது

பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன்

நெய் - 2 ஸ்பூன்

முந்தரி பருப்பு - 10 கிராம்

வெண்ணெய் - 2 ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்

நாட்டு சர்க்கரை - 1 கப்

ருசியான இறால் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?

செய்முறை :

சுவையான தேங்காய் பால் அல்வா செய்வது எப்படி?

தேங்காயை சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு கெட்டியான தேங்காய் பாலை எடுக்கவும். ஒரு பத்தை தேங்காய் எடுத்து பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ளவும்.

கடாயில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்தரி பருப்பை இரண்டாக உடைத்து லேசாக வறுக்கவும், பின்பு பொடியாக நறுக்கிய தேங்காய் போட்டு பொன்னிறமாக வறக்க வேண்டும்.

சீனியில் உள்ள விதமான தீமைகள் என்ன? தெரியுமா?

ஒரு கப் திக்கான தேங்காய் பாலை எடுத்து கடாயில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் போட்டவுடன் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் ஊறிய பச்சரிசியை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

தேங்காய் பால் நன்றாக கிளறி விட்டு உடனே அரைத்த பச்சரிசி மாவை ஊற்றவும். நன்றாக கலக்கிய பின் நாட்டு சர்க்கரையை போட்டு கிண்ட வேண்டும்.

அடுப்பை சிம்மில் வைத்தே செய்ய வேண்டும் தொடர்ந்து இடைவிடாமல் 15 நிமிடம் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் பிறகு ஏலக்காய் தூளை சேர்த்து மீண்டும் நல்ல கிளறி விடவும்.

கட்டியில்லாமல் விடாமல் நன்றாக கிளறி கொண்டே இருந்தால் அல்வா பதத்திற்கு நன்று சுருண்டு தேங்காய் பால் அல்வா வந்து விடும்.

கரண்டியால் கிளறும் போது நன்கு சுருண்டு வரும் நிலையில் வறுத்த தேங்காய் மற்றும் முந்தரி பருப்பை போட்டு  இறக்கி விடவும்.  

அடுப்;பை அனைக்கவும். சுவையான புதுமையான தேங்காய் பால் அல்வா ரெடி!

குறிப்பு :

அடுப்பை சிம்மில் வைத்து செய்தால் அடிபிடிக்காமல் இருக்கும். எந்த அல்வா செய்தாலும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து சமைப்பது நல்லது அல்வா சுவை மிகுந்தாக இருக்கும்.  

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அருமையான பலன்கள் !

கருப்பெட்டி, அச்சுவெல்லம் சேர்த்தும் பயன்படுத்தலாம். வெல்லத்தை பயன்படுத்தும் போது வெல்ல கரைலை கொதிக்க விட்டு வடிகட்டி பயன்படுத்தவும். 

அப்பொழுது தான் வெல்லத்தில் இருக்கும் தூசி கல் மண் நீக்க முடியும்.