உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் செய்வது எப்படி?

0

தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்

உருளைக்கிழங்கு - 2

பச்சைப் பட்டாணி - கால் கப்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

கடுகு - அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

சுவையான பப்பாளிக்காய் கூட்டு செய்வது எப்படி?

செய்முறை:

உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை பட்டாணியை  வேக வைத்து கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியை  அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் 

கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

அடுத்து இதனுடன் உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தின் விலை மற்றும் அவருக்கு வழங்கப்படும் வசதிகள் தெரியுமா?

பிறகு அதில் உதிரியாக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். சூப்பரான உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)