சில்லி பிளேக்ஸ் தயார் செய்வது எப்படி?

சில்லி பிளேக்ஸ் தயார் செய்வது எப்படி?

0

மிளகாய் நாம் அன்றாடம் உணவுக்கு சுவை சேர்ப்பதற்காக காரத்தை தருவதற்காக என்று தான் அறிந்திருப்போம். 

சில்லி பிளேக்ஸ் தயார் செய்வது எப்படி?

மிளகாயில் உணவுப் பொருள்களோடு உன்னதமான மருத்துவப் பயன்களும் அடங்கியுள்ளன என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டோம். 

நாம் இன்று பயன்படுத்தும் வெண்ணை உருவான கதை !

நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும் கூட மிளகாய் நல்லது. 

காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் ஏ சத்தானது அதிகம். 

அதனால், விழித் திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது. 

மிளகாயில் காரம் மிகுந்திருப்பினும் பல்வேறு  நோய்களையும் அது போக்க வல்லது. 

சரி இனி மிளகாய் கொண்டு சில்லி பிளேக்ஸ் தயார் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

இட்லி மாவு ஒரு வாரத்திற்கு மேல் புளிக்காமல் இருக்க என்ன செய்ய வெண்டும்?

தேவையான பொருட்கள் :

காய்ந்த மிளகாய் - 100 கிராம்

உப்பு - தேவைக்கு

செய்முறை :

சில்லி பிளேக்ஸ் தயார் செய்வது எப்படி?

மிளகாயை, காம்பு நீக்கி இரண்டாக நறுக்கி, விதைகளை நீக்கவும். மிளகாயை லேசான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

ஆற விட்டு உப்புடன் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இதனை காற்றுப்புகாத டப்பாவில் ஸ்டோர் பண்ணினால் 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

ஆப்கன் பெண்களின் நிலை... ஷரியத் சட்டம் என்ன சொல்கிறது?

இதனை ஆம்லெட், மாசி சம்பல், முட்டை பொடிமாஸ், காய் வதக்கல், உருளை ரோஸ்ட், மசாலா கொழுக்கட்டை, அடை, 

பிஸ்ஸா, ஊத்தப்பம், காரச்சட்னி, உருளை பொடிமாஸ் போன்றவற்றுக்கு சாதரண மிளகாய் பொடியை பயன்படுத்துவதை விட இது சுவை அதிகமாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)