நாட்டு சர்க்கரையில் சுவையான பீட்ரூட் அல்வா செய்வது எப்படி?





நாட்டு சர்க்கரையில் சுவையான பீட்ரூட் அல்வா செய்வது எப்படி?

0

நாட்டு சர்க்கரை நாட்டு கரும்பு வெல்லம் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. நாட்டு சர்க்கரை என்பது கரும்பு சாறிலிருந்து வெல்லப்பாகு எடுத்து தயாரிக்கப்படும் சர்க்கரை தான். 

நாட்டு சர்க்கரையில் சுவையான பீட்ரூட் அல்வா செய்வது எப்படி?

இதுவே வெள்ளை சர்க்கரைக்கு நிறைய வேதிப்பொருட்களை போட்டுத் தான் அந்த வெண்மை நிறத்துக்கு கொண்டு வருவார்கள். 

வெள்ளை சர்க்கரையைக் காட்டிலும் நாட்டுச் சர்க்கரையில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க நினைப்போர் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துதல் நல்லது. 

உங்களுக்கு ஆஸ்துமா பிரச்னை, மூச்சு வாங்குதல், நுரையீரல் போன்ற பிரச்னைகள் இருப்பின் நாட்டுச் சர்க்கரை எடுத்துக்கொள்வது நல்லது.

பீட்ரூட்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கலாம். 

இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுவது இதய நோய் அபாயத்தில் இருந்து நம்மை காக்க உதவுகிறது. இதில் காணப்படும் பீட்டலைன்ஸ் தான் பீட்ரூட்டிற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. 

இந்த ஆன்டி ஆக்ஸிடன் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகிறது. அதிலும் அதனை பொரியல், சாம்பார் என்று செய்து சாப்பிடாமல், அல்வா செய்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். 

உங்களுக்கு நாட்டு சர்க்கரை சேர்த்து பீட்ரூட் அல்வா எப்படி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

தேவையான பொருட்கள் :

துருவிய பீட்ரூட் - 2 கப்

கொதிக்க வைத்த பால் - 1 கப்

நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

பாதாம், முந்திரி - சிறிது

செய்முறை:

நாட்டு சர்க்கரையில் சுவையான பீட்ரூட் அல்வா செய்வது எப்படி?

முதலில் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் பால் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் மென்மையாகும் வரை வேக வைக்கவும். பின் ஏலக்காய் தூள், நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கிளறவும். பால் வற்றும் வரை அடுப்பில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.

அப்படி கிளறி விடும் போது, கலவை அடிப்பிடிக்கும் வகையில் வரும். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி விட வேண்டும். பின் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.

முதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் !

அதே சமயம் மற்றொரு அடுப்பில், சிறு வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அல்வாவில் சேர்த்து பிரட்டி கொள்ளவும். 

பால் சுண்டும் வரை கிளறி அல்வா பதத்துக்கு வந்ததும் இறக்கி ருசிக்கலாம். சுவையான பீட்ரூட் அல்வா ரெடி!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)