செட்டிநாடு வாழைக்காய் கல்யாண பொரியல் செய்வது எப்படி?

0

வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது. 

செட்டிநாடு வாழைக்காய் கல்யாண பொரியல்
புற்று நோய் என்பது ஒரு கொடுமையான வியாதியாகும். அதிலும் வயிற்றில் வருகிற பெருங்குடல் புற்று ஒருவருக்கு மிகுந்த வேதனையை தரக்கூடிய ஒரு புற்று ஆகும். 

வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. 

பேய் ஓட்டுவதாக கூறிய சாமியார் - கதறி அழுத பெண் !

பல நன்மைகளை தரக்கூடிய வாழைக்காயில் செட்டிநாடு வாழைக்காய் கல்யாண பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை :

வாழைக்காய் - 2

பொரிகடலை - 2 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி + 1 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய்- 10

நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

வாழைக்காயின் தோல் சீவியபின் அடர்த்தியான நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஸொமோட்டோ உருவாக காரணமாக இருந்த இரு நண்பர்கள் !

1 தேக்கரண்டி சோம்பு, மிளகாய், பொரிகடலை, கசகசா, இவற்றை கரகரப்பான தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

வாழைக்காய் துண்டுகளுடன் உப்பு மற்றும் தூளாக்கியுள்ள பொருட்களைப் போட்டு பிரட்டி கலந்து வைக்கவும்.

வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து வாழைக்காய் துண்டுகளைப் போட்டு, நன்றாக வதக்கி எடுத்து பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)