செட்டிநாடு கோழி வறுவல் செய்வது எப்படி?





செட்டிநாடு கோழி வறுவல் செய்வது எப்படி?

எலும்புகளை ஆரோக்கியமாக்கும் நாட்டுக்கோழி இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.
செட்டிநாடு கோழி வறுவல் செய்வது எப்படி?
அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். நம்மூரில் நாட்டுக்கோழி தீமை என்று கூறுபவர் அதிகம். 

நாட்டுக் கோழியில் உள்ள B வைட்டமின்கள் கண்புரை மற்றும் தோல் கோளாறுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பலவீனத்தை நீக்கவும், செரிமானத்தை மேன்படுத்தவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். 
ஒற்றைத் தலைவலி, இதயக் கோளாறுகள், நரை முடி, அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்கவும் அவை உதவியாக இருக்கும். சிக்கனில் உள்ள வைட்டமின் D கால்சியம் உறிஞ்சுதலை அதிகப்படுத்தும்,

அதனால் எலும்பு வலுப்பெரும். வைட்டமின் A கண்பார்வையை மேன்படுத்தும் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் ஹீமோகுளோபின் உருவாக்க உதவும், மேலும் தசை செயல்பாடு மற்றும் இரத்த சோகையை அகற்ற உதவுகின்றன.

தேவையான பொருட்கள்: 

கோழி – 1

பெரிய வெங்காயம் – 2
இஞ்சி – சிறுதுண்டு

பூண்டு – 5 பல்

பச்சை மிளகாய் – 4 உலர்ந்த

மிளகாய் – 5

கறிவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள் தூள் – அரைத் தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி

அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு 
அப்பன்டிசைடிஸ் என்பது கல் அடைப்பது அல்ல !
செய்முறை: 
செட்டிநாடு கோழி வறுவல்
முழுக்கோழியை நன்கு சுத்தம் செய்து, இரண்டு சரி பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். மார்பு, தொடைப் பகுதி சதைகளில் இரண்டு மூன்று ஆழமான வெட்டுக்கள் உண்டாக்க வேண்டும். 

வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைத் தோலுரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். 

பச்சை மிளகாய், உலர்ந்த மிளகாய் ஆகியவற்றின் காம்புகளை நீக்கி நறுக்கின வெங்காயம், இஞ்சி, பூண்டுடன் சிறிது நீர் சேர்த்துக் கொண்டு, விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள விழுதுடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, அரிசி மாவு, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையினை இறைச்சியின் மீது நன்கு பூசி, பிறகு நறுக்கின கறிவேப்பிலையில் புரட்டி சுமார் 2 மணி நேரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊறவிட வேண்டும்.
சொரியாசிஸ் - தவிர்க்க வேண்டியவை !
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் அதில் மசாலாத் தடவிய கோழி இறைச்சியை போட்டு எல்லா பக்கமும் வேக வைக்க வேண்டும்.

பிறகு தீயைச் சற்று குறைத்து, வாணலியை மூடி வைத்து சுமார் பதினைந்தில் இருந்து இருபது நிமிடங்கள் வேகவிட வேண்டும்.

அவ்வப்போது திறந்து இறைச்சியைத் திருப்பிப் போட்டு, மிதமுள்ள மசாலா வினையும் தடவி, தேவையெனில் சிறிது நீரினையும் தெளித்து வேக விட வேண்டும். 

கறி பொன்னிறமானதும் எடுத்து, துண்டுகள் போட்டுப் பரிமாற வேண்டும்.
Tags: