ஆர்கானை தூண்டும் செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது எப்படி?





ஆர்கானை தூண்டும் செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது எப்படி?

கடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் ஒரு வகை உணவு நண்டு. இது மிகவும் சுவை மிகுந்த உணவாக இருகிறது. ஆரோக்கியத்தில் இதன் பங்கு பெருமளவில் உள்ளது.
ஆர்கானை தூண்டும் செட்டிநாடு நண்டு குழம்பு
நண்டில், அத்தியாவசிய கொழுப்பு, ஊட்டச்சத்து மற்றும் கனிமங்கள் அதிக அளவில் உள்ளது. 

நாட்பட்ட இதய நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் நண்டு எடுத்துக் கொள்வதால் அதன் பாதிப்பு குறைகிறது மற்றும் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கிறது. 

அணுக்கள் சேதமடையாமல் பார்த்துக் கொள்வதோடு செக்ஸ் ஆர்கன்களைத் தூண்டி, உடலை வெப்பமேற்றி, செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டிவிடும் தன்மையும் இதற்கு உண்டு. 

உடல் உஷ்ணத்தைத் தூண்டும் என்பதால் தான் இயல்பாகவே குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த நண்டை உட்கொள்ளலாம். 

நண்டு இறைச்சியில் உள்ள செலெனியம், நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவித்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவுகிறது.

செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டும் தன்மையுடைய  நண்டிலிருந்து  செட்டிநாடு  நண்டு குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம்

தேவையான பொருட்கள்: 
நண்டு – 1 கிலோ

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக் கரண்டி

தக்காளி – 5 சின்ன

வெங்காயம் – 400 கிராம்

மிளகாய்த் தூள் – 5 தேக்கரண்டி

கரம் மசாலாத் தூள் – 2 தேக்கரண்டி

தேங்காய் – 1

பச்சை மிளகாய் – 15

சோம்பு – 3 தேக்கரண்டி

கொத்தமல்லி- சிறிதளவு

கறிவேப்பிலை- சிறிதளவு

உப்பு -தேவையான அளவு

எண்ணெய்-தேவையான அளவு
  
செய்முறை: 
செட்டிநாடு நண்டு குழம்பு
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைப் போட்டு லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

வதக்கிய வற்றை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். கடலைப் பருப்பையும் வறுத்து எடுத்து, துருவியத் தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலைத் தாளிக்க வேண்டும். பிறகு இதில் சுத்தம் செய்த நண்டு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள், 

தக்காளி வெங்காயம் விழுது மற்றும் நண்டு நனையும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.

நண்டு வெந்ததும் தேவையான உப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லி தூவிப் பரிமாற வேண்டும்.
Tags: