செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?





செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

0

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் காளான் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு அதிகமாகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் என கண்டறியப் படுள்ளது.

செட்டிநாடு காளான் பிரியாணி
இது பாசி வகையை சார்ந்த தாவரம். இதில் பெரும்பாலும் விஷக் காளான் உள்ளன. அதே போல் மிக அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட காளான்களும் உள்ளன. 

பஞ்சமி நிலம் என்றால் என்ன?

இவற்றுள் மூன்று வகையான காளான் சாப்பிடப்படுகின்றன.அவை மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான். இதில் ஒவ்வொரு காளானும் சிறந்த பயன்களைத் தருகின்றது. 

மூன்றுமே புற்று நோயை தடுக்கும் சக்தி கொண்டவை.எய்ட்ஸ்க்கும் மருந்தாக பயன்படுகிறது. இந்த காளானில் செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை :

பாஸ்மதி அரிசி - 500 கிராம்

காளான் - 250 கிராம்

பெரிய வெங்காயம் - 2

கரம் மஸாலாத்தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

சீரகத்தூள் - அரை தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

தக்காளி - 2

பட்டை - 2 துண்டுகள்

கிராம்பு - 4

அன்னாசிப்பூ (Star anise)- 2

ஏலக்காய் - 3

இதயம் நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

நெய் - 2 மேஜைக்கரண்டி

புதினா இலை - 1 மேஜைக்கரண்டி

தயிர் - 2 மேஜைக்கரண்டி

தனியாத்தூள் - 2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி  - 2 அங்குலம்

பூண்டு  - 10 பல்

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி இலை - 1 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசியை குழையாமல் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புதினா இலை, கொத்தமல்லி இலை இவற்றை அரைத்துக் கொள்ளவும்.

சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் பாம்பு !

காளானை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். காளானுடன் தயிர், தனியாத்தூள், கரம் மஸாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் இவற்றைக் கலந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.

வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும்.

வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மஸாலா மற்றும் உப்பு போட்டு நன்றாக வதங்கியதும், ஊற வைத்துள்ள காளானைப் போட்டு காளான் வேகும் வரை வதக்கவும்.

அனைத்தும் கலந்து கெட்டியானதும், நெய் சேர்த்து வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு மிதமான தீயில் வைத்து மெதுவாக கிளறி, இறக்கி பரிமாறவும்.

குறிப்பு 

காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.சில வகை காளான்களை உண்ணலாம். சில வகை, போதை தரும்.

சிலவகை, பயங்கர விஷம். எல்லாமே ஒன்று போலவே தோன்றும். ஆகவே, கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் தீவில் விடப்படும் பெண்கள் !

விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணம் உடையதாகவும் இருக்கும். 

விஷக்காளானை உண்டு விட்டால் உடனடியாக சோம்புக் கஷாயம் பருகவும் சோம்புக் கஷாயம், பாம்பின் விஷம், காளான் விஷம் இவற்றை முறிக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)