குழந்தைகளுக்கு பிடித்த வாழைப்பழம் கோதுமை தோசை செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு பிடித்த வாழைப்பழம் கோதுமை தோசை செய்வது எப்படி?

0

தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் : 1

கோதுமை மாவு : 1/2 கப்

அரிசி மாவு : 1 ஸ்பூன்

ரவை : 1/4 கப்

வெல்லம் அல்லது கருப்பட்டி : 1/3 கப்

ஏலக்காய் தூள் : 1/4 ஸ்பூன்

உப்பு : 1 சிட்டிகை

எண்ணெய் / நெய் : தேவையான அளவு

செய்முறை : 

குழந்தைகளுக்கு பிடித்த வாழைப்பழம் கோதுமை தோசை

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வாழைப் பழத்தை துண்டுகளாக்கி கையாலோ அல்லது மத்தாலோ நன்கு மசித்து விடவும்.

அடுப்பில் மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை நசுக்கி போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும். 

வெல்லம் கரைந்தவுடன் அடுப்பை அணைத்து ஆறியவுடன் வடிகட்டி வாழைப்பழத்துடன் சேர்க்கவும். மற்ற மாவையும் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரத்திற்கு ஊற விடவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் எண்ணெய் தடவி மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

ஆட்டின் கொழுப்பை சாப்பிட்டால்

சுவையான வாழைப்பழம் கோதுமை தோசை ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)