குழந்தைகளுக்கான பிரெட் பீட்சா செய்வது எப்படி?

குழந்தைகளுக்கான பிரெட் பீட்சா செய்வது எப்படி?

0

ஜங்க் ஃபுட்டாக இருந்தாலும் கூட பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது பீட்சா. சமீபத்திய ஆண்டுகளில் எண்ணற்ற புது புது உணவுகள் வந்து விட்டாலும் கூட மக்களுக்கு பீட்சா மீதான ஆர்வம் சிறிதும் குறையவில்லை. 

குழந்தைகளுக்கான பிரெட் பீட்சா

பீட்சாவின் தனித்துவமான சுவைக்கு, சீஸ் சேர்க்கப்படுவது மற்றும் நமது விருப்பத்திற்கு ஏற்ப பீட்சாக்களின் டாப்பிங்ஸை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன. 

மேலும் பீட்சாக்கள் விரைவாக கிடைக்க கூடியவையாக இருக்கின்றன. சிலர் Frozen Pizza-க்களை வாங்கி வைக்கிறார்கள். இவற்றை வெறும் 10 நிமிடங்களில் சூடுபடுத்தி சாப்பிடலாம். 

சிலர் அடிக்கடியோ அல்லது வாரம் தவறாமல் ஒரு முறையாவது பீட்சா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

பிரபலமாக இருந்தாலும் கூட பீட்சா ஒரு ஜங்க் ஃபுட் என்பதால் இதனை அடிக்கடி சாப்பிடுவதால் சில உடல்நல அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

மிகவும் வித்யாசமாகவும், சுவையாகவும் இருக்கும் இதை குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு, மாலை நேரம் சாப்பிட இதை நாம் செய்து தரலாம். 

10-15 நிமிடங்களில் எளிதாகச் செய்து விடக்கூடிய ஸ்நாக் இது. சூடாகப் பரிமாற சுவைத்துச் சாப்பிடும் உங்கள் வீட்டு செல்லங்கள்.

தேவையான பொருட்கள்:

பிரட் – 6 ஸ்லைஸ்

துருவிய மொஸரெல்லா சீஸ் – 3 டேபிள் ஸ்பூன்

ஆலப்பேன்யோ துண்டுகள் – காரம் தேவைக்கேற்ப

தக்காளி சாஸ் / பாஸ்தா சாஸ் / கெட்ச் அப் – 1/2 கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பிரட்டில் லேசாக வெண்ணெய் தடவி, தோசைக் கல்லில் அல்லது ஓவனில் வைத்து டோஸ்ட் செய்யவும். 

பிரட்டின் இருபுறமும் திருப்பி விட்டு, லேசான பொன்னிறமாக டோஸ்ட் செய்து, பிரட் துண்டுகளை தனியே எடுத்து வைக்கவும்.

பிரட்டின் மீது சிறிது தக்காளி சாஸ்/ பாஸ்தா சாஸ்/ கெட்ச்அப் வைத்து, தட்டையான கரண்டியால் சாஸ் பிரட் முழுவதும் பரவும்படி தேய்த்து விடவும்.

இதன் மீது தேவையான அளவு ஆலப்பேன்யோவை துண்டுகளாக நறுக்கி மேலே தூவி நிரப்பவும். தேவையான அளவு உப்பை மேலே தூவிக் கொள்ளவும்.

கடைசியாகத் துருவிய சீஸை மேலே பரவலாகத் தூவி விடவும். இதே போல் எல்லா பிரட் துண்டுகளுக்கும் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும். 

ஓவனை 250 ° – ல் வைத்து ப்ரீ-ஹீட் செய்யவும். (5 நிமிடங்கள்). ஓவனில் கவனமாக பிரட் துண்டுகளை வரிசையாகப் பரப்பி வைக்கவும். 5 நிமிடங்கள் வரை பேக் செய்து பின் வெளியே எடுக்கவும்.

(சீஸ் நன்றாக உருகிய பின் வெளியே எடுக்கவும்.) சூடாகப் பரிமாறவும். நறுக்கிய குடை மிளகாய், சோளம் (corn), ஆலிவ் சேர்த்தும் இதே போல் பிரட் பிஸ்ஸா செய்யலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)