பீட்ரூட் வைத்து டேஸ்டியான கோலா உருண்டை செய்வது எப்படி?





பீட்ரூட் வைத்து டேஸ்டியான கோலா உருண்டை செய்வது எப்படி?

0

ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும். பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச் சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

பீட்ரூட் வைத்து டேஸ்டியான கோலா உருண்டை செய்வது எப்படி?
கல்லீரல் கோளாறு களுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த மருந்து என்றே கூறலாம். 

பீட்ரூட்டை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள அது ரத்தம் உடலில் தேவையான அளவு அதிகரிக்கவும் உதவும். 

ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் பீட்ரூட், கேரட் போன்ற இனிப்புத் தன்மை அதிகம் உள்ள காய்கறிகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப் படுவார். 

மற்றவர்கள் அனைவரும் வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ள சிறந்தது இந்த பீட்ரூட். சாதாரணமாக பொறியலோ கூட்டோ செய்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது. 

எனவே இது போல கோலா உருண்டையாக செய்து தர குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள் : .

பீட்ரூட் - 1 கப் துருவியது

இஞ்சி - 1 இன்ச்

பூண்டு - 4 பல்

சோம்பு - கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

வர மிளகாய் - 2

தேங்காய் - அரை கப்

பொட்டுக்கடலை - அரை கப்

மஞ்சள் தூள்

முந்திரி - 4

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - 2 கொத்து

மல்லித்தழை - 2 கொத்து

சுவையான தாய் யெல்லோ சிக்கன் கறி செய்வது எப்படி?

செய்முறை : .

பீட்ரூட் வைத்து டேஸ்டியான கோலா உருண்டை செய்வது எப்படி?

பொட்டுக்கடலை, முந்திரி பருப்பு, இஞ்சி, பூண்டு, வர மிளகாய், காய்ந்த மிளகாய் ஆகியவை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதிலே தேங்காய் மற்றும் பீட்ரூட் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது பீட்ரூட் சாறையே பிழிந்து எடுத்து விட வேண்டும். 

தண்ணீர் தேவைப்பட்டால் பீட்ரூட் சாறையே எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்து உருண்டை பிடிக்கும் பதத்துக்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 

உருண்டை பிடிக்கும் பதம் இல்லா விட்டால் கூடுதலாக பொட்டுக்கடலை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த அனைத்தையும் ஒரு பவுலுக்கு மாற்ற வேண்டும்.

அதில் நல்ல பொடியாக நறுக்கிய கறிவேப்பிழை, கொமத்த மல்லித்தழை, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெயை சூடாக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடைமிளகாய் ஸ்டப்ஃடு முட்டை இட்லி செய்வது எப்படி?

இதை ஈவ்னிங் ஸ்னாக்காகவும் பயன்படுத்தலாம் அல்லது லன்ச் பாக்ஸை காலி செய்ய அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சாதத்துக்கு சைட்டிஷ்ஷாக கொடுத்து விட்டீர்கள் என்றால், அவர்கள் லன்ச் பாக்ஸை காலி செய்ய உதவியாக இருக்கும்.

இந்த பீட்ரூட் கோலா உருண்டையின் நிறமும், சுவையும் குழந்தைகளை கவரும் வகையில் இருக்கும். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)