தேவையான அளவு :

சிக்கன், 

சீரக சம்பா அரிசி, 

வெங்காயம், 

இஞ்சி - பூண்டு விழுது, 

கிராம்பு,  சோம்பு,  பட்டை, முந்திரி, 

எலுமிச்சம் பழம், 

பச்சை மிளகாய் , 

தயிர் , 

நெய், 

புதினா,  கொத்தமல்லி , எண்ணெய், உப்பு தேவையான அளவு 

தேங்காய் பால் அரிசியின் அளவுக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை :
தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது
1 . பிரியாணி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் பட்டை, கிராம்பு சேர்த்து, அரிசியை உதிரியாக வேக வைத்து வடித்து வைக்கவும். 
2. மீதம் இருக்கும் பட்டை, கிராம்பை இஞ்சி, பூண்டுடன் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரியை தனியாக அரைக்கவும். அதன் பிறகு கொத்தமல்லி இலை, புதினா, சேர்த்து தனியாக அரைக்கவும். 

3. குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்த வெங்காய மசாலாவை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பச்சை வாசனை போனவுடன் அரைத்த கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
4. சிக்கன் வெந்து, மசாலா சுருண்டு வந்ததும், வடித்து வைத்துள்ள சாதம் சேர்த்து கிளறி, அரை மணி நேரம் மிதமான தீயில் வைத்து இறக்கினால் சுவையான தேங்காய் பால் சிக்கன் பிரியாணி தயார்.