டேஸ்டியான முட்டைகோஸ் பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி?





டேஸ்டியான முட்டைகோஸ் பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி?

0

பச்சை மிளகாய் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இதயத்துக்கு நல்லது. முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன.

டேஸ்டியான முட்டைகோஸ் பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி?
பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.

முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவை வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை. 

இவை அனைத்திலும் நல்ல அளவில் சத்துக்கள் அடங்கியுள்ளன. முட்டைகோஸில் உள்ள தழைச்சத்தும் நார்ச்சத்தும் பெருங்குடலையும், மலக்குடலையும் நன்கு வேலை செய்ய உதவுகின்றன. 

புரதம் நிறைந்த பிரட்களை உட்கொள்ளுங்கள் !

முட்டைகோஸ் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, உடல்எடையை குறைக்க உதவும். புற்றுநோய் வளர்வதையும் தடுக்கும். முட்டைகோஸ் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட பயப்படுவது அதனுடைய வாசனைக்காகத் தான்.

ஆனால், இப்படி உடலுக்கு நன்மையளிக்கும் முட்டைகோஸில் பச்சை மிளகாய் சட்னி செய்வது குறித்து காணலாம்.

தேவையான பொருட்கள் : .

முட்டைகோஸ் - 150 கிராம் 

இஞ்சி - சிறு துண்டு 

பச்சை மிளகாய் - 2 

புளி - எலுமிச்சை பழம் அளவு 

உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன் 

எண்ணெய் - 2 டீஸ்பூன் 

உப்பு - தேவைகேற்ப 

தாளிக்க : .

கடுகு - கால் டீஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 2 

எண்ணெய் - ஒரு டீஸ்பூன் 

கறிவேப்பில்லை - சிறிதளவு 

கை விரல்களை தேய்த்தால் முடி வளரும் !

செய்முறை : .

டேஸ்டியான முட்டைகோஸ் பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி?

முட்டைகோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாயை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும். 

வறுத்த உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கோஸ் அதனுடன் புளி, உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும். 

பருந்து மனிதனுக்கு தரும் பாடம் என்ன?

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் கொட்டி பரிமாறவும். சுவையான சத்தான முட்டைக்கோஸ்  பச்சை மிளகாய் சட்னி ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)