சுவையான தாய் யெல்லோ சிக்கன் கறி செய்வது எப்படி?

0
தேவையானவை :
கோழிக்கறி (எலும்பு இல்லாதது) - 700 கிராம்

தாய் யெல்லோ கறி பேஸ்ட் - 6 மேஜைக்கரண்டி

தயிர் - 150 மில்லி லிட்டர்

கத்தரிக்காய் - 5

கறி சுண்டைக்காய் - 10
தேங்காய்ப்பால் - 1 கப்

கொத்த மல்லி இலை - 2 மேஜைக் கரண்டி

துளசி இலை (Basil Leaves) - 1 மேஜைக் கரண்டி

பெரிய வெங்காயம் - 2

பூண்டு - 4 பல்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்
செய்முறை :
சுவையான தாய் யெல்லோ சிக்கன் கறி செய்வது எப்படி?
கோழிக்கறியை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் 1 மேஜைக் கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் யெல்லோ கறி பேஸ்ட் போட்டு லேஸாக வதக்கவும். 
அதன் பின் தயிர், பேஸில் லீவ்ஸ், கொத்தமல்லி இலை இவற்றை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் வதக்கி இறக்கி வைத்துக் கொள்ளவும். 

கத்தரிக் காயை நறுக்கிக் கொள்ளவும். சுண்டைக் காயை (கறி சுண்டைக்காய் எனப்படும் கசக்காத சுண்டைக்காய்) காம்பு நீக்கி, லேஸாக தட்டிக் கொள்ளவும். 
வெங்காயம். பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய சைனீஸ் வாணலியில் (Wok) மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

அதன் பின் கோழிக்கறி துண்டுகளைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும். கோழிக்கறி வெந்ததும் வதக்கி வைத்துள்ள மஸாலாவைப் போட்டு வதக்கவும். 
தேங்காய்ப் பால் ஊற்றி, காய்கறி களை சேர்க்கவும். காய்கறிகள் வெந்ததும் உப்பு சரி பார்த்து இறக்கி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)