சுவையான ரைஸ் பெப்பர் ரிங்ஸ் செய்வது எப்படி?





சுவையான ரைஸ் பெப்பர் ரிங்ஸ் செய்வது எப்படி?

0

சளி, இருமல் வந்து விட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டு விடலாம். தண்ணீரை சூடாக்கித் தான் குடிக்க வேண்டும்.  

சுவையான ரைஸ் பெப்பர் ரிங்ஸ் செய்வது எப்படி?

வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். 

வெது வெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. 

தொண்டையில் ஏற்பட்ட  வீக்கத்தைக் குறைக்கும்.  தொண்டை உறுத்தலை நீக்கும். சளியையும் குறைக்கும். 

தேவதையின் வரம்... வல்லவர் யார் ?

நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. 

ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. சரி, இனி பெப்பர் கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சுவையான ரைஸ் பெப்பர் ரிங்ஸ் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை : .

அரிசி மாவு – 2 கப் (அரிசியை களைந்து, அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு காய வைத்து மாவாக அரைக்கவும்), 

மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், 

வறுத்து அரைத்த உளுத்தம் மாவு – கால் கப், 

வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

பயமில்லாத மனிதர்கள் உண்டா? பயம் உருவாகும் அந்த நொடி !

செய்முறை : .

சுவையான ரைஸ் பெப்பர் ரிங்ஸ் செய்வது எப்படி?

வெண்ணெயுடன் உப்பு சேர்த்துக் குழைக்கவும். அதனுடன் அரிசி மாவு, உளுத்தம் மாவு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக பிசையவும். 

அதிலிருந்து சிறிய அளவு மாவு எடுத்து நீளமாக உருட்டி இரண்டு முனைகளையும் சேர்த்து ’ரிங்’ (வளையம்) போல் செய்யவும். 

கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன?

எல்லா மாவையும் இது போல் செய்து கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, செய்து வைத்துள்ள ரிங்குகளை பொரித்து எடுக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)