கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன்?

கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன்?

0

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அது போல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. 

கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன்?
திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.

கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. 

எலுமிச்சை கலந்த தண்ணீர் அருந்துவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் !

மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. 

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

புற்றுநோயைத் தடுக்கும் 

புற்றுநோயைத் தடுக்கும்

கடுகு விதைகளில் குளுக்கோசினோலேட்ட (glucosinolate) மற்றும் மைரோசினேஸ் (myrosinase) கலவைகள் நிறைந்துள்ளது. 

இவை நம் உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமான செல்களின் வளாச்சியைத் தடுக்கிறது. 

கடுகில்லாமல் சாம்பார் சுவை பெறாது... கடுகு வகைகள் எத்தனை?

விஞ்ஞானிகளின் அய்வின் படி, இந்த விதைகள் கீமோ-தடுப்பு (chemo-preventive) பண்புகளையும் கொண்டிருக்கின்றன. 

இவை புற்று நோய்களை ஏற்படுத்தும் காரணிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கின்றது

வறட்டு இருமல்

வறட்டு இருமல்

கடுகை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான தேனீர் தயாரிக்கலாம். கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். 

இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். 

வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்னைகள் இல்லாமல் போகும். இந்த தேனீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்.

சருமத்தை மெருகேற்றும் கடுகு

சருமத்தை மெருகேற்றும் கடுகு

உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால் நம் சருமம் வறண்டும், கடினத்தன்மையும் பெருகிறது. 

கடுகை அரைத்து முகம் மற்றும் சருத்தில் தடவி வந்தால், நம் உடலில் ஈரப்பதத்தை அளித்து சருமத்தில் உள்ள மாசு மறுக்களை நீக்கி பருக்களில் இருந்தும் பாதுகாக்கிறது. சருமமும் போலிவுருகிறது.

ஆயுளை நீட்டிக்கும் அதிசயப் பொருள் சீந்தில் கொடி மருத்துவ பயன்கள் ! 

கடுகு விதைகளில் இருக்கும் விட்டமின் A, விட்டமின் K மற்றும் விட்டமின் C ஆகியவை வயது முதிர்ச்சியை குறைத்து இளமைத் தோற்றதை தக்கவைக்க உதவுகிறது.

நல்ல உணவு முறை நம் அரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. 

எனவே ஆரோக்கியமான வாழ்வை பெற நம் முன்னோர்கள் ஆன்றாடம் பயன்படுத்தி வரும் உணவு முறைகளை வரும் காலாத்திற்கும் எடுத்து செல்லவேண்டியது அவசியமாகிறது.

இதயத்திற்கு இதம் தரும்

இதயத்திற்கு இதம் தரும்

இருதய பிரச்சினைகள் இருப்பவர்கள் கடுகு விதைகளை அவர்களின் உணவுகளில் எடுத்துக் கொள்வது அவசியம். 

இவை உடலின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு ரத்தத்தில் கெட்ட கொழுப்பையயும் குறைக்கிறது. 

கடுகு விதைகளை மட்டும் சமையலுக்கு பயன்படுத்துவதைத் தவிர கடுகு எண்ணெயையும் சமையலுக்கு பயன்படுத்தலாம். 

7 ஆண்டுகளுக்கு முன் சஸ்பெண்ட்... இன்று மாபெரும் வெற்றி கொடுத்த ராபின்சன் கதை ! 

கடுகு எண்ணெய்யை உடலில் தடவி குளிக்கலாம். பெண்களுக்கு மாதவிடாய் முடிவடையும் தருணத்தில் தோன்றும் உடல் வலியின் போது கடுகு எண்ணெய் தேய்த்து குளித்தால் வலி நீங்கும்.

ஒற்றைத் தலைவலி நீக்கும் அருமருந்து

ஒற்றைத் தலைவலி நீக்கும் அருமருந்து

தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியால் நீங்கள் அவதிப்படும் போது கடுகின் நெடி திறம்பட செயல்படுகிறது. கடுகு விதைகளில் மெக்னீசியம் (magnesium) அதிகமாக உள்ளன, 

இவை உங்கள் நரம்புகளைத் தணிக்க உதவுகிறது. மேலும் உடலின் பல்வேறு பகுதிகளில் வலிகள் மற்றும் தசைப் பிடிப்புகளுக்கு நிவாரணம் தருகிறது. 

மூன்று கருந்துளைகள் ஒன்றிணைந்த அரிய நிகழ்வு... விஞ்ஞானிகள் சாதனை !

கடுகு செடியை பயன்படுத்தி ஒற்றை தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம். கடுகு செடியை சிறுதுண்டுகளாக வெட்டவும். 

இதில் போதுமான அளவு நீர்விட்டு கொதிக்க வைத்து நீராவி பிடித்தால் ஒற்றை தலைவலி,  தலைபாரம், இருமல், நெஞ்சக சளி, மூக்கடைப்பு சரியாகும்.

செரிமான பிரச்சனைக்கு சிறந்தது

செரிமான பிரச்சனைக்கு சிறந்தது

சீரற்ற உணவுப் பழக்கம் காரணமாக அஜீரணம், செரிமானப் பிரச்சைகள் ஏற்படலாம். அதிலிருந்து விடுபட கடுகு உதவி செய்கிறது. 

இந்த சிறிய கடுகு விதைகளில் ஏராளமான நார்ச்சத்து அடங்கியுள்ளன. இது கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறன. மேலும் உடலின் செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

எலும்பிற்கு வலு சேர்க்கும்

எலும்பிற்கு வலு சேர்க்கும்

கடுகில் செலினியம் (selenium) என்கிற தாதுச் சத்து நிறைந்திருப்பதால் உங்கள் எலும்புகளுக்கு இது மிகவும் நல்லது. 

எலும்புகளை வலுசேர்த்து உறுதியாக்குகின்றது. மேலும் கடுகு உங்கள் நகங்கள், தலைமுடி மற்றும் பற்களுக்கும் வலு சேர்க்க உதவுகிறது. 

மனப் பதற்றம் (ANXIETY) என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? 

கடுகில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் (Anti-oxidiants) மற்றும் ஆன்டி - இன்ப்ளாமேட்டரி (Anti-inflammatory) மூலக்கூறுகள் அடங்கியுள்ளது. இது ஈறுகள், எலும்புகள் மற்றும் பற்களில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)