கடுகில்லாமல் சாம்பார் சுவை பெறாது... கடுகு வகைகள் எத்தனை?

கடுகில்லாமல் சாம்பார் சுவை பெறாது... கடுகு வகைகள் எத்தனை?

0

சமையல் அறையில் நீங்கா இடம் பிடித்திருக்கும் கடுகு, பார்க்க சிறிதாக இருந்தாலும் அதன் பலன் என்னவோ மிகப் பெரியது. 

கடுகில்லாமல் சாம்பார் சுவை பெறாது... கடுகு வகைகள் எத்தனை?
கடுகில்லாமல் நமது சாம்பார், ரசம், களி என பல்வேறு உணவு வகைகள் முழுமையான சுவையை பெறாது. பெரும்பாலான உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது கடுகு.

கடுகு இருமலுக்கு மிக சிறந்த மருந்தாகும். கடுகு காரம் மிக்கது, உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. காய்ச்சலை தணிப்பதுடன் வலியை குறைக்கும். வீக்கத்தை கரைக்கிறது. 

கடுகுக்கு என்று தனி சுவை கிடையாது. இந்திய சமையலில் சூடான எண்ணெயில் கடுகு பொரிக்கும் போது, அதன் மேல் தோல் அகற்றப்படுகிறது. 

கடுகில் செலினியம், மெக்னீசியம், கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை மிகுதியாக காணப்படுகிறது.

கடுகு விதைகளின் நன்மைகள்

கடுகு விதைகளின் நன்மைகள்

கடுகு விதைகளில் அதிகபடியான வைட்டமின்கள் ( vitamins) மற்றும் மினரல்கள் ( Minerals), நார்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. 

கடுகு விதைகளளை நாம் அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவுகிறது.

கடுகு வகைகள்

கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகைகள் உண்டு.

வெண் கடுகு 

வெண் கடுகு

நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் கடுகை போலவே இருக்கும் இந்த வெண்கடுகு மிகவும் விசேஷமான சக்திகளைக் கொண்டுள்ளது. 

இது வெண்மை நிறத்தில் இருப்பதால் வெண்கடுகு என்று கூறப்படுகிறது. ஆன்மீக பரிகாரங்கள் செய்ய வெண்கடுகு பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. 

மேலும் திருஷ்டிகள் நீக்கக்கூடிய பேராற்றல் இதற்கு இருப்பதால் வீட்டில், கடைகளில், தொழில் ஸ்தாபனங்கள் போன்ற இடங்களில் திருஷ்டி சுற்றி போட வெண்கடுகு பயன்படுகிறது.

கருங்கடுகு 

இது நம் சமையல் செய்ய பயன்படுத்துவது. இதிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

நாய் கடுகு

நாய் கடுகு

இந்த நாய் கடுகு (mustard seeds) செடியின், பூக்கள், விதைகள், மற்றும் இலைகள் அனைத்துமே, மருத்துவம் மற்றும் உணவுக்கு பயன்படுகின்றது. 

இதன் தாவரவியல் பெயர், கிளிமே விச்கோச (Cleome viscosa). இந்த நாய் கடுகை, நாய்வேளை, மற்றும் காட்டுகடுகு என்ற பெயரிலும் அழைப்பார்கள். இந்த செடி ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)