ஆயுளை நீட்டிக்கும் அதிசயப் பொருள் சீந்தில் கொடி மருத்துவ பயன்கள் !

ஆயுளை நீட்டிக்கும் அதிசயப் பொருள் சீந்தில் கொடி மருத்துவ பயன்கள் !

0

ஆயுளை நீட்டிக்கும் அதிசயப் பொருள் ஏதேனும் உண்டா? என்று கேட்பவர்களிடம், இருக்கவே இருக்கிறது சீந்தில் எனச் சட்டெனப் பதில் உரைக்கலாம். 

ஆயுளை நீட்டிக்கும் அதிசயப் பொருள் சீந்தில் கொடி மருத்துவ பயன்கள் !
வயோதிகம் வாட்டும் போதும், தீராப் பிணிகளால் அவதியுறும் நேரத்திலும், உடல் நலனை மீட்டெடுக்க சீந்தில் போதும். 

பல பருவங்களைக் கடந்து வாழும் மூலிகை மார்க்கண்டேயரான சீந்தில் கொடி, மனித குலத்தில் பல மார்க்கண்டேயர்களை உருவாக்குகிறது.

இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும் நாகாசனம் !

சீந்தில் (Tinospora cordifolia) என்றால் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, ஆனால் இதன் மகத்துவத்தை தெரிந்து கொண்டால் நிச்சயம் உங்களுக்குப் பயன் தரும். 

பூலோக அமிர்தம் என்றும் கற்ப மருந்து (மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவும் மருந்து )என்று சொல்லும் அளவிற்கு அளவில்லா அற்புத மருத்துவ குணம் கொண்டது.

சீந்திலின் மற்ற பெயர்கள்

சீந்திலின் மற்ற பெயர்கள்

சீந்திலுக்கு அமிர்தவல்லி, சோமவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்கள் உண்டு. வல்லி என்றால் கொடி என்ற அர்த்தமும் உண்டு. 

கொடி வகையான சீந்திலுக்கு அமிர்த வல்லி எனும் பெயரும், அமிர்தம் என்றால் அழியாத தன்மையைக் கொடுக்கும் என்ற பொருளில் அமிர்தை என்னும் பெயரும் கிடைக்க பெற்றது.

சீந்திலின் பண்பு

சீந்திலின் பண்பு

இது மரங்களில் தொற்றிப் படரும் ஒரு மூலிகை தாவரம். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் மூடியும் தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலமும் மூடியிருக்கும். 

இலைகள் அழகாக இதய வடிவில் காணப்படும். இவை மரங்களின் மேல் ஏறிப் படரும். கொடியை அறுத்து விட்டாலும் உலர்ந்து போகாமல், காற்றிலுள்ள நீரை உறிஞ்சி வாழும் திறனுடையது. 

ரம்ஜான் முடிந்த பின் ஏற்படும் வயிற்று சிக்கல்களை சரி செய்ய?

அறுபட்ட இடத்திலிருந்து மெல்லிய கம்பி போன்ற கொடிகளைக் கீழ் நோக்கி வளர விட்டு பூமியில் வேரூன்றிக் கொண்டு பூமியிலிருந்து நீரை உறிஞ்சி வாழ ஆரம்பிக்கும்.

ஆயுளையே நீட்டிக்கும் சீந்தில் கொடியால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

தீரா நோய்க்கு மருந்து.

சீந்தில் மூலிகை, உடலின் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் உள்ளது. இதனால் நாள்பட்ட காய்ச்சலில் இருந்து விடுபட உதவுகிறது. 

மேலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் டெங்கு, பன்றிக் காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களின் தாக்கத்தைக் குறைக்கிறது.

செரிமான பிரச்சனைக்கு

செரிமான பிரச்சனைக்கு

சீந்தில் மூலிகை அவ்வப்போது ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கிறது. மேலும் குடல் தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் சீந்தில் மூலிகை பயன்படுத்தப்படுகிறது. 

அரை கிராம் சீந்தில் பொடியுடன் சிறிது நெல்லிக்காய் அல்லது சர்க்கரையுடன் சேர்த்து உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

நீரிழிவு நோய்க்கு

நீரிழிவு நோய்க்கு

சீந்தில் மூலிகை இரத்தச் சர்க்கரை குறைப்பானாகச் செயல்பட்டு நீரிழிவு நோயைக் குணப்படுத்த உதவுகிறது. 

குறிப்பாக இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது. சீந்திலின் கிளைச் சாறானது அதிக அளவு இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது.

தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்களா? உண்மை என்ன?

மருந்தாக: இன்சுலின் சுரப்பை அதிகரித்து, அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் உற்பத்தியாகும் காரணிகளைத் தடுத்து, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க சீந்தில் உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எலும்புகளுக்கு ஊட்டத்தைக் கொடுப்பதோடு, எலும்புகளின் திண்மையை அதிகரித்து முதிர்ந்த வயதிலும் வீறுநடை போட சீந்தில் துணை நிற்கிறது. 

புற்று செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு, புற்று நோயின் அதிகாரத்தைக் குறைக்கும். தனது எதிர்-ஆக்ஸிகரணி செயல்பாடு மூலம், நமது உடல் உறுப்புகளின் செயல்திறனைப் பன்மடங்கு அதிகரிக்கிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி

நோய் எதிர்ப்புச் சக்தி

சீந்தில், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இந்த மூலிகை ப்ரீ ரேடிக்கல்ஸ்களுடன் (Free radicals) போராட உதவுகிறது. மேலும் இந்த மூலிகையில் இயற்கையாகவே ஆண்டி ஆக்ஸிடன்ட்களை (Anti-oxidants) கொண்டுள்ளது. 
இந்த அடையாளம் உள்ள பெண்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்களாம் !

இது உங்கள் செல்களை ஆரோக்கியமாக வைத்து நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. சீந்தில் மூலிகை உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றி, இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம், மனச் சோர்வு, மனக் கவலை போன்ற பிரச்சனைகளைக் குறைக்க இந்த மூலிகை அற்புத மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 

சீந்தில் ஒரு அழுத்த எதிர்ப்பு மூலிகை (adaptogenic herb) இவை உடலின் நச்சுத் தன்மையையும் குறைக்க உதவுகிறது. உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கிறது. மனதை அமைதியாக்குகிறது.

ஆஸ்துமா

ஆஸ்துமா

சீந்திலின் வேரை மெல்லுவது, அல்லது அதன் சாற்றைக் குடிப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல நிவாரணியாகும். 

மேலும் மார்பு இறுக்கம், சுவாச பிரச்சனை, இருமல், மூச்சுத் திணறல் போன்றவற்றுக்குச் சீந்தில் மூலிகை நல்ல பலனைத் தருகிறது.

பனிக்காலத்தில்

பனிக்காலத்தில் சீந்தில் சாறு

பனிக்காலத்தில் ஏற்படும் சளி, தலை பாரத்துக்குச் சீந்தில் சாறு, கறிவேப்பிலைச் சாறு, கற்பூரவள்ளிச் சாறு, மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து மருந்தாகப் பயன்படுத்தலாம். 
வாகன இன்சூரன்ஸினை புதுபிக்கவில்லை எனில் ஒரு ஹேப்பி நியூஸ் !

சீந்தில் கொடி, பொடுதலை, வல்லாரை, திப்பிலி போன்ற மூலிகைகளின் சாற்றைச் சுண்டச் செய்து தயாரிக்கப்படும் ‘சுரச’ வகை மருந்து குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்தும்.

கண் பார்வைக்கு

கண் பார்வைக்கு

சீந்தில் மூலிகையின் பொடியைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அது குளிச்சியான பின் கண் இமைகளில் தடவி வருவதன் மூலம் கண் பார்வை தெளிவடையும்.

முக அழகிற்கு

முக அழகிற்கு

வயது மூப்பு எதிர்ப்பு (Anti-aging) பண்புகளைச் சீந்தில் கொண்டுள்ளது. இதனால் இவை எப்போதும் குறைபாடற்ற ஒளிரும் தோலைத் தருகிறது. 

மேலும் இருண்ட புள்ளிகள், சுருக்கங்கள், சிறு கோடுகள், முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் போன்றவற்றைக் குறைக்கச் சீந்தில் மூலிகை உதவி செய்கிறது.

சீந்தில் ஒரு இயற்கையோடு சேர்ந்த பாதுகாப்பான மூலிகை என்பதால் இதை நுகர்வதினால் எந்த பக்க விளைவுகளும் இல்லை, இருப்பினும் சில சந்தர்ப்பங்களில், மலச்சிக்கல் மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்தலாம். 

க்ரீன் சில்லி சிக்கன் செய்வது எப்படி?

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை உட்கொள்வதாக இருந்தால் உங்கள் இரத்தத்தின் அளவை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். 

அதே போல் கர்ப்பமாக உள்ளவர்கள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

இந்திய மருத்துவத்தில் சீந்தில்

இந்திய மருத்துவத்தில் சீந்தில்

பல்வேறு செல்வாக்குகளை பெயர்களைப் பெற்ற இந்த தாவாரத்தின் மருத்துவ பண்புகளும் அலாதியானது தான். இந்த மூலிகை கொடி இந்திய சித்த மருத்துவத்தால் காலங்காலமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

இந்த அமிர்தவல்லி இலையின் தண்டுகள் அதிகபட்ச மருத்துவ பயன்பாடு கொண்டது. மேலும் இதன் வேர்களும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை செய்வது எப்படி?

இதன் நன்மைகள் மற்றும் பயன்கள் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (Food and Drug Administration) ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றன. இந்த மூலிகை மருந்து சாறு, தூள் மற்றும் காப்ஸ்யூல்கள் வடிவத்தில் உட்கொள்ளலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)