தயிர் சாப்பிடும் போது இதையெல்லாம் சாப்பிடக்கூடாது !

தயிர் சாப்பிடும் போது இதையெல்லாம் சாப்பிடக்கூடாது !

0

சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும் பாலானவர்களுக்கு தயிர் மிகவும் பிடிக்கும். இதில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. 

தயிர் சாப்பிடும் போது இதையெல்லாம் சாப்பிடக்கூடாது !
மேலும் எளிதில் செரிக்கக் கூடிய உணவும்கூட. ஆனால் சில உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிடக் கூடாது என பலருக்கும் தெரியாது. 

அப்படி சேர்த்து சாப்பிடும் போது பலவித உடல் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம். அப்படி எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.

பிரியாணிக்கு வைக்கப்படும் ரைத்தா காம்பினேஷன் கூட தவறு தான் என்கின்றனர். ஏனெனில் தயிர் குளிர்ச்சி தரக்கூடியது. வெங்காயம் சூட்டை கிளப்பக் கூடியது. 

இந்த இரண்டு எதிர் தன்மைக் கொண்ட உணவை ஒன்றாக இணைத்து சாப்பிடுவது உடல் உபாதைகளை உண்டாக்கும்.

மாம்பழமும் வெங்காயத்தைப் போல் சூட்டை உண்டாக்கும் பொருள். எனவே இதுவும் தயிருடன் கலப்பது தவறான செயல்.

மீன், முட்டை இரண்டுமே அதிக புரதச்சத்து நிறைந்த உணவு. எனவே இரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்து சாப்பிடுவது தவறு. 

இல்லையெனில் செரிமான மின்மை, வயிற்று வலி என வயிறு உபாதைகள் உண்டாகும். அதே போல் புரதச்சத்து மிக்க முட்டையுடனும் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது.

பாலிலிருந்து தயிர் உருவானாலும் இரண்டையும் ஒன்று சேர சாப்பிடுவது தவறு. அப்படி சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அசிடிடி உண்டாகும்.

சுவையான ரைஸ் பெப்பர் ரிங்ஸ் செய்வது எப்படி?

உளுந்தும் தயிரும் சேர்த்து சாப்பிடுவது செரிமானப் பிரச்னையை உண்டாக்கும். அதோடு வாயுத்தொல்லை, வயிற்று மந்தம், வயிற்றுப் போக்கு போன்றவையும் உண்டாகும்.

எண்ணெயுடன் வறுத்த உணவு, பொறித்த உணவு போன்றவற்றை தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது செரிமானத்தைக் குறைத்து உடல் உபாதைகளை உண்டாக்கும்.

தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். இரவு நேரத்தில் தயிரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும்.

தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டிலுமே புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.

வாழ்க்கையின் மிகவும் கசப்பான உண்மை?

முக்கியமாக தயிருடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது.

அதேப் போல் தயிருடன் சீஸ் சேர்த்தும் சாப்பிடக்கூடாது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)