வெங்காயம், பூண்டு தோலை வீணாக்காமல் இப்படி பயன்படுத்தலாம் !





வெங்காயம், பூண்டு தோலை வீணாக்காமல் இப்படி பயன்படுத்தலாம் !

0

இந்திய உணவுகளில் குறிப்பாக தென்னிந்திய உணவுகளில் முக்கிய இடத்தை வகிக்கும் இரண்டு பொருட்கள் வெங்காயமும், பூண்டும். 

வெங்காயம், பூண்டு தோலை வீணாக்காமல் இப்படி பயன்படுத்தலாம்
இந்த இரண்டு பொருட்களும் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டவை. அதிலும் வெங்காயம் இல்லாத சமையல் என்பது சுவையில்லாத ஒன்றாகவே கருதப்படுகிறது.

நம் முன்னோர்கள் இந்த இரண்டு பொருட்களையும் உணவில் சேர்க்க காரணம் இவற்றின் சுவை மட்டுமல்ல அவற்றின் ஆரோக்கிய குணங்களும் தான்.  

ஒவ்வொரு உணவிலும் முக்கிய பொருட்கள் வெங்காயம் மற்றும் பூண்டு. இந்த இரண்டு பொருள்கள் இல்லாமல் உணவில் சுவை இருக்காது. 

வெங்காயம், பூண்டு தோலை வீணாக்காதீர்கள்

வெங்காயம் மற்றும் பூண்டு கிட்டத்தட்ட ஒவ்வொரு வகை உணவிலும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வெங்காயம், பூண்டு தோல் உரிக்கப்பட்ட பயன்படுகிறது. 

இந்த தோள்களில் பயன்களை தெரிந்து கொண்டால் அடுத்த முறை இதனை வீணாகக் குப்பையில் எறிய மாட்டார்கள். 

ஈஸி முட்டை குழம்பு செய்வது எப்படி?

இவற்றின் ஆரோக்கியத்தை பற்றி நாம் ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும் நாம் பலரும் அறியாத ஒரு விஷயம் இவற்றின் தோல்களிலும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.

இனி வெங்காயம் மற்றும் பூண்டு தோலை குப்பையில் போடாதீர்கள். அதிலிருக்கும் நன்மைகளைப் பற்றி இதில் பார்ப்போம்.

சூப் தயாரிக்க

சூப் தயாரிக்க

குளிர் காலங்களில் சூப் குடிப்பது மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது. அந்த சூழ்நிலையில் கடையில் சூப் வாங்குவதற்கு பதிலாக அதை வீட்டில் தயாரித்து குடிக்கும் நேரத்தில், 

வெங்காயம் மற்றும் பூண்டை தோள்களை போட்டு, சூப் தயாரித்த பிறகு அது ஒரு சல்லடை மூலம் வடிகட்டி, தோள்களை அகற்றி விடலாம்.

தோசை மாவில் சேர்க்கலாம்

தோசை மாவில் சேர்க்கலாம்

தோசைக்கு மாவு கலக்கும் போது அதில் வெங்காயத் தோலை சிறிது அரைத்து அதில் கலக்கவும். இதை செய்வதன் மூலம் சுவை இரட்டிப்பாகும். 
பெரிபெரி சிக்கன் ஸ்கீவர்ஸ் செய்வது எப்படி?

இது தோசையின் சுவையை அதிகரிப்பதுடன் நமக்கு அதிக ஊட்டச் சத்துக்களையும் வழங்குகிறது. மேலும் உடலுக்கு பல ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும். 

ஹேர் டை

ஹேர் டை

வெங்காய தோல் சிறந்த ஹேர் டையாக செயல்படக்கூடியது. இது நரைமுடியை பழுப்பு நிறமாக மாற்ற உதவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வெங்காய தோலை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். 

இது ஆறிய பின் தோலுடன் சேர்த்து தலையில் தேய்க்கவும். இதை தலையில் 30 நிமிடம் நன்கு ஊற வைத்து பின்னர் குளிக்கவும். 

ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ் செய்வது எப்படி?

மேலும்  அது முடியை கருமையாக்குவது மட்டுமல்லாமல் இழந்த பிரகாசத்தை மீண்டும் கொண்டு வருகிறது. 

இதற்காக நீங்கள் 4 முதல் 5 கப் தண்ணீரில் சில வெங்காயத்தை வேக வைக்க வேண்டும். முடிக்கு ஷாம்பு போட்ட பிறகு இந்தத் தண்ணீரால் முடியை கழுவ வேண்டும். இதனால் முடி கருமையாக மாறும். 

கை, கால்களில் அரிப்பு இருந்தால் வெங்காயம் பூண்டு தோள்களை தண்ணீரில் கொதிக்க வைத்து இறக்கி சிறிது நேரம், இந்த நீரில் கை, கால்களை வைக்க வேண்டும். இதனால் அரிப்பு நிவாரணம் கிடைக்கும்.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

வெங்காயத்தின் தோல் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சருமத்தில் ஏற்படும் வீக்கம், அரிப்பு, தடிப்பு போன்றவற்றை குணப்படுத்தக் கூடும். 

இவ்வாறு பாதிக்கப்பட்ட இடங்களில் வெங்காயத்தோலை வைத்து தேய்ப்பது விரைவில் நிவாரணத்தை வழங்கும்.

தசை வலிகள்

தசை வலிகள்

வெங்காய தோலை நீரில் போட்டு அதனை 10 முதல் 20 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைக்கவும். 

இரும்புச் சத்து உணவுகள் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படுத்தும் தெரியுமா?

பின்னர் இதனை ஆற வைத்து தோல்களை தூக்கி எறிந்து விட்டு சர்க்கரை சேர்த்து தூங்க செல்லுமுன் குடிக்கவும். இது உங்களுக்கு உள்ள தசைப்பிடிப்பு மற்றும் வலிகளை குணப்படுத்தும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)