தாய் சிக்கன் ஷாட்டே செய்வது எப்படி?





தாய் சிக்கன் ஷாட்டே செய்வது எப்படி?

அசைவ உணவுகள் இல்லாத ஞாயிற்றுக்கிழமைகளா? நாளை செய்வதற்கு இதோ உங்களுக்காக சில வித்தியாசமான சிக்கன் ரெசிப்பிக்கள்... 
தாய் சிக்கன் ஷாட்டே
தேவையானவை:
சிக்கன் ஸ்ட்ரிப்ஸ் (நீளவாக்கில் நறுக்கிய சிக்கன் துண்டுகள்) – 250 கிராம்

லெமன் கிராஸ் – ஒரு இன்ச் அளவு

எலுமிச்சை இலைகள் – 3

இஞ்சி (தோல் சீவியது) – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 2

தேங்காய்ப்பால் – 50 மில்லி

கறி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:
லெமன் கிராஸ், எலுமிச்சை இலைகள், இஞ்சி, காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். 
பாத்திரத்தில் அரைத்த விழுது, தேங்காய்ப்பால், உப்பு, கறி மசாலாத்தூள், சிக்கன் துண்டுகள் சேர்த்துக் கலக்கி ஊற விடவும். 

பிறகு சிக்கன் துண்டுகளை ஸ்கீவர்களில் குத்தி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சிக்கனை அடுக்கி டோஸ்ட் செய்து எடுக்கவும். 

இதனை ஸ்வீட் சில்லி சாஸூடன் சூடாகப் பரிமாறவும்.
Tags: