ஈஸி முட்டை குழம்பு செய்வது எப்படி?





ஈஸி முட்டை குழம்பு செய்வது எப்படி?

உடல் எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் காலை உணவாக முட்டை எடுத்துக் கொள்ளலாம். 
ஈஸி முட்டை குழம்பு செய்வது எப்படி?
அதிலும் காலை உணவு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்யும் நிலையில், அதற்கு தகுந்த உணவாக முட்டை இருக்கிறது. 

முட்டையில் அளவற்ற புரதச்சத்து நமக்கு கிடைக்கும். அது நாள் முழுவதும் நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். முட்டை சாப்பிட்டால் நாள் முழுவதும் பசி கட்டுக்குள் இருக்கும். 

இதனால் பிற உணவுகளின் அளவு குறைகிறது என்ற அளவில் உடல் எடையை குறைக்க இது உதவியாக அமையும். 
புரதச்சத்து மிகுதியாக கொண்ட முட்டை சாப்பிட்டால் நம் தசைகள் வலிமை அடையும் மற்றும் உடல் உறுப்புகள் இயல்பாக செயல்பட தொடங்கும். 

முட்டையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் நம் உடல் வலிமை பெற உந்துசக்தியாக அமையும் மற்றும் நமக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். 

முட்டையில் கொழுப்புச்சத்து அதிகம் என்பதால் நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால், இது தவறான கண்ணோட்டம் ஆகும். 

ஏனென்றால் முட்டையில் இருப்பது நல்ல கொழுப்புச் சத்து ஆகும். இதய நோய்களுக்கு இந்த கொழுப்பு காரணம் அல்ல. ஆகவே, காலை உணவாக தவறாமல் முட்டையை எடுத்துக் கொள்ளலாம்.

தேவையானவை :
முட்டை – 5

வெங்காயம் – 2

தக்காளி – 3

இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

தேங்காய் பால் – 1 கப்

தனியா தூள் – 3 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

சீரகத் தூள் – 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்

கரம்மசாலா பொடி – சிறிதளவு

பட்டை – 1

கிராம்பு – 2

ஏலக்காய்- 2

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு
செய்முறை :
ஈஸி முட்டை குழம்பு
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்ற வற்றை சேர்த்து வதக்கவும்.

பின் அவை நன்கு வெடித்தப் பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதைப் சேர்த்து பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

நன்கு வதக்கியப் பின் அத்துடன் தனியா தூள், சீரகத் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா பொடி, மஞ்சள் தூள் ஆகிய வற்றைப் போட்டு வதக்கவும். சிறிது நேரம் கழித்து தேங்காய் பால் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்தப் பிறகு உப்பு சுவை பார்த்து, பின் அடுப்பை சிம்மில் வைத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி 5 நிமிடம் தட்டை வைத்து மூடி, வேக விடவும்.
இப்போது சுவையான, ஈஸியான முட்டை குழம்பு ரெடி!!! இந்த குழம்பை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
Tags: