ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ் செய்வது எப்படி?





ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ் செய்வது எப்படி?

இந்த உலகில் சிக்கன் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், சிக்கனை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளுக்கும் நாம் அடிமைகள். நமது வீட்டில் சிக்கன் சமைக்கும் நாளில் மட்டும், நாம் சப்புக்கொட்டி வயிறு புடைக்க சாப்பிடுவது உண்டு. 
ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ்
நம்மில் பலருக்கு தோன்றும், தினமும் சிக்கன் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்று?… நம்மில் பலர் தினமும் அசைவ உணவு சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு என நினைப்போம். 

ஆனால், அந்த நம்பிக்கை 50% தவறானது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்தவகையில், சிக்கனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது தான். 

ஆனால், தினமும் சரியான அளவு சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதம் ஆஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுக்கிறது. 

அதுமட்டும் அல்ல, சிக்கன் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிக்கனில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் B12 நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது. 

அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அசைவ உணவுகள் இல்லாத ஞாயிற்றுக் கிழமைகளா? நாளை செய்வதற்கு இதோ உங்களுக்காக சில வித்தியாசமான சிக்கன் ரெசிப்பிக்கள்... 

தேவையானவை:
சிக்கன் பிரெஸ்ட் (நெஞ்சுக்கறி - ஆர்கானிக்) - 2

தைம் – சிறிதளவு

மிளகு (ஒன்றிரண்டாகப் பொடித்தது) – ருசிக்கேற்ப

ஆலிவ் ஆயில் – ஒரு டீஸ்பூன்

மஷ்ரூம் – 5 (பொடியாக நறுக்கவும்)

ஒய்ஸ்டர் சாஸ் – ஒரு டீஸ்பூன்

சிக்கன் ஸ்டாக் – 50 மில்லி

பூண்டு பல் – 4 (பொடியாக நறுக்கவும்)

உப்பு – தேவையான அளவு

வேக வைத்து மசித்த உருளைகிழங்கு, காய்கறிகள் - தேவையான அளவு

செய்முறை:
பாத்திரத்தில் சிக்கனுடன் உப்பு, பொடித்த மிளகு, தைம், ஆலிவ் ஆயில், பூண்டு சேர்த்துக் கலந்து தனியாக எடுத்து வைக்கவும். 

பிறகு, சிக்கனை தோசைக்கல்லில் போட்டு மூடிபோட்டி க்ரில் செய்யவும் (இதற்குத் தண்ணீர் தேவையில்லை. சிக்கனில் உள்ள தண்ணீரே போதுமானது).

வாணலியில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு மஷ்ரூம் சேர்த்து வதக்கவும், 

இதனுடன் சிக்கன் ஸ்டாக், ஒய்ஸ்டர் சாஸ், உப்பு, மிளகு சேர்த்துக் கிளறி சாஸ் பதமாக வந்தபின் இறக்கவும். 
சிக்கனை மஷ்ரூம் சாஸ், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, காய்கறிகள் உடன் பரிமாறவும்.
Tags: