மிக்ஸ்டு ஃப்ரூட் தோசை செய்வது எப்படி?

மிக்ஸ்டு ஃப்ரூட் தோசை செய்வது எப்படி?

தேவையானவை:

பச்சரிசி - ஒரு கப்,

நறுக்கிய பழத்துண்டுகள் (ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை, மாதுளை, பப்பாளி) - ஒரு கப்,

உப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை:
மிக்ஸ்டு ஃப்ரூட் தோசை
பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து பழத்துண்டு களையும் உப்பையும் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
(உப்பு சேர்ப்பதால் சுவை கூடும்). அரைத்த மாவை மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும். இதில் காரம் வேண்டும் என விரும்புபவர்கள், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்கலாம்.

இனிப்பு, காரம், புளிப்பு, உப்பு என எல்லா சுவைகளும் இணைந்து, அமர்க்களமாக இருக்கும் இந்த தோசை.
Tags: