கடலை மாவு தோசை செய்வது எப்படி?





கடலை மாவு தோசை செய்வது எப்படி?

தேவையானவை:

கடலைமாவு - ஒரு கப்,

அரிசிமாவு - அரை கப்,

எலுமிச்சம்பழம் - 1,

பச்சை மிளகாய் - 2,

பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
கடலை மாவு தோசை
கடலைமாவு, அரிசிமாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்து மல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு எல்லா வற்றையும் சேர்த்துக் கலக்கவும்.
எலுமிச்சை சாறையும் விட்டு, தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாக வார்க்கவும். எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
Tags: