ருசியான காய்கறி அவியல் செய்வது எப்படி?





ருசியான காய்கறி அவியல் செய்வது எப்படி?

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பீட்ரூட்டை ஜூஸ் செய்து தினமும் அருந்திவர இந்த அல்சர் பிரச்சனை உடனே சரியாகி விடும். இரத்த சோகை என்று சொல்ல கூடிய அனிமியா பிரச்சனை உள்ளவர்கள். 
ருசியான காய்கறி அவியல் செய்வது எப்படி?
இந்த பீட்ருட்டை சாப்பிடும் உணவில் சேர்த்து வர, இரத்த சோகை பிரச்சனை சரியாகி விடும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். 

வாழைக்காயில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், கர்ப்பிணி பெண்கள், சிறிய குழந்தைகள் என்று அனைவருமே சாப்பிடலாம்.

குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. 

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண்பார்வை குறைபாடு மற்றும் கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் பயன்படுகிறது.

வைட்டமின் ஏ குறைபாட்டினால் சரும வறட்சி, நகம் உடைவது மற்றும் முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். 

எனவே கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ இந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய மிகவும் பயன்படுகிறது. எனேவ தினமும் உணவில் அதிகளவு கேரட் சேர்த்து கொள்ளுங்கள் அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம்.

தேவையானவை

வாழைக்காய் - 1

முருங்கைக்காய் - 2

கத்தரிக்காய் - 3

அவரைக்காய் - 10

மாங்காய் - 1

உருளைக்கிழங்கு - 1

கேரட் - 1

தயிர் - 2 க‌ப்

தேங்காய் - 1

பச்சை மிளகாய் - 10

தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செ‌ய்முறை :

ருசியான காய்கறி அவியல் செய்வது எப்படி?

காய்க‌றிகளை நன்றாகக் கழுவித் தோல் நீக்கி ‌ பாத்திரத்தில் போடுங்கள். அளவாக நீர் ஊற்றி உப்பையும் போட்டுக் கலக்கி அடுப்பில் வைத்து வேக விடுங்கள்.
தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். பிறகு தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம் முதலிய வற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

காய்கறிகள் பாதி வெந்ததும் அரைத்த விழுதைப் போட்டுக் கலக்கி விடுங்கள். அதன் பின் காய்கறிகள் நன்கு வெந்ததும் தயிரை ஊற்றிக் கலக்கி விடுங்கள். 

பத்து நிமிடங்களுக்குப் பின் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கலக்கி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இறக்கவும்.
Tags: