மாங்காய் அவியல் செய்வது எப்படி?





மாங்காய் அவியல் செய்வது எப்படி?

மாங்காய் என்றால் விரும்பாத நபர்களே இல்லை. மேலும் இது காய்,பழம் எனக்கேத்த வகையில் எடுத்துக் கொண்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். 
மாங்காய் அவியல் செய்வது எப்படி?
உணவில் மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மாங்காய் செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.

நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். 
மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும். 

காலில் பித்த வெடிப்பு உள்ளவர்கள் வெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மாங்காயில ஊறுகாய் செஞ்சிருப்பீங்க. 

அவியல் செஞ்சிருக்கீங்களா? அப்போ இத கண்டிப்பா ட்ரை பண்ணிப்பாருங்க.. மாங்காய் கொண்டு மாங்காய் அவியல் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
என்னென்ன தேவை?

மாங்காய் - 1

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - சிறிது

சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 தேக்கரண்டி

அரைக்க...

தேங்காய் - 1 கப்

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தேனிலவு பயணத்தின் பொது விபத்து - மரணித்த இளம் பெண் !
எப்படிச் செய்வது?
மாங்காய் அவியல் செய்வது எப்படி?
முதலில் மாங்காயை எடுத்து வெட்டி வைக்கவும். ஜாரில் தேங்காய், சீரகம், மிளகாய் தூள் எடுத்து அரைத்து வைக்கவும்.
ஒரு கடாயில் மாங்காய் எடுத்து உப்பு, மஞ்சள் தூள், சிறிது சர்க்கரை மற்றும் அரைத்து வைத்த மசாலா சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு கலந்து வேக விடவும். 

பின் ஒரு வாணலில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து அவியல் மீது ஊற்றி பரிமாறவும். சுவையான மாங்காய் அவியல் ரெடி!!!
Tags: