ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி செய்வது | Oats Vegetable Rotti Recipe !

ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி செய்வது | Oats Vegetable Rotti Recipe !

0
தேவையான பொருட்கள் : 

கோதுமை மாவு - 250 கிராம்,

உப்பு - தேவைக்கு,

ஓட்ஸ் - 100 கிராம்,

கொத்த மல்லித் தழை - சிறிது,

துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,

துருவிய பீட்ரூட் - 1 டேபிள் ஸ்பூன்,

பச்சை மிளகாய் - 3,

எண்ணெய் - 30 மி.லி.,

சீரகம் - 1 டீஸ்பூன்.

செய்முறை :
ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி
வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஓட்ஸை சூடான கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். 
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு போட்டு கலந்து, கேரட், பீட்ரூட், தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி வைக்கவும். 

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறு உருண்டை களாக பிடித்து லேசாகத் தேய்த்து கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்து மொறு மொறுவென்று வந்ததும் எடுத்து பரிமாறவும். சத்தான சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)