அருமையான பச்சை பட்டாணி தோசை செய்வது எப்படி?

அருமையான பச்சை பட்டாணி தோசை செய்வது எப்படி?

0

மணி மணியாய் கண்ணுக்கு விருந்தளிக்கும் பச்சை பட்டாணி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. 

அருமையான பச்சை பட்டாணி தோசை செய்வது எப்படி?
அடர்த்தியான ஊட்டச்சத்து உணவுகளில் ஒன்று. இதில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், கே, சி, ஃபோலேட், புரதம் போன்றவை நிறைந்துள்ளது. 

பெண்களின் பிறப்புறுப்பு முடியை அகற்றுவது எப்படி?

இதிலிருக்கும் மாங்கனீசு, நார்ச்சத்து நிறைந்தவை. பச்சை பட்டாணியை எதனோடு சேர்த்தாலும் அதன் சுவையே அலாதியானது தான். 

பட்டாணியில் இருக்கு ஃபைபர் செரிமான பாதையில் உணவை இயக்க செய்கிறது. செரிமானம் சீராக இருக்கவும் நச்சுப் பொருள்கள் அகற்றவும் செய்கிறது.. 

ஒவ்வொரு நாள் காலையிலும் இட்லி, தோசை தான் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். எனக்கு அதை தவிற வேறு எதுவும் செய்யத் தெரியாது என நினைக்கிறீர்களா..? 

சுவையான  தவா பரோட்டா செய்வது எப்படி?

கவலையை விடுங்கள் அந்த அலுத்துப் போன அதே தோசையில் இப்படி வித்தியாசமான தோசை வகைகளையும் செய்யலாம். 

அதிலும் பச்சை பட்டாணி தோசை சுட்டுக் கொடுங்கள். வீட்டில் ரசித்து சாப்பிடுவார்கள்.

தேவையானவை :
ரவை - 1 கப்

பச்சை பட்டாணி - 1/2 கப்

வெங்காயம் - 1

எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்

தயிர் - 1/2 கப்

கொத்தமல்லி - 1 கைப்பிடி

பச்சைமிளகாய் - 3

சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையானவை அளவு

2022-ல் காத்திருக்கும் பேரழிவுகள்? யார் இந்த பாபா வங்கா?

செய்முறை :

அருமையான பச்சை பட்டாணி தோசை செய்வது எப்படி?

மிக்ஸி ஜாரில் ரவை, பச்சை பட்டாணி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் , தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். 

ரவை அளந்த அதே கப்பில் அரை கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரையுங்கள். மைய அரைபட்டதும் ஒரு பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளுங்கள்.

மூக்கடைப்பை போக்கும் இயற்கை நிவாரணிகள் ! 

இப்போது நறுக்கிய வெங்காயம், உப்பு, சீரகம், கொத்தமல்லி தழை கொஞ்சம். எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். 

மாவு கெட்டிப்பதத்தில் இருந்தால் தான் மொறுமொறு தோசை கிடைக்கும்.

மாவு ரெடியானதும் எப்போதும் போல் தோசை சுட்டு எடுங்கள். அவ்வளவு தான் பச்சை பட்டாணி தோசை தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)