சுவையான பப்பாளிக்காய் கூட்டு செய்வது எப்படி?





சுவையான பப்பாளிக்காய் கூட்டு செய்வது எப்படி?

0

பழுக்காத காயாக இருக்கும் பப்பாளியில் கூடுதல் நன்மைகளைப் பெறலாம். ஆனால் அதை அப்படியே சாப்பிட முடியா விட்டாலும் இப்படி அருமையான சுவையில் கூட்டு செய்யலாம்.

சுவையான பப்பாளிக்காய் கூட்டு செய்வது எப்படி?
பொதுவாகவே பப்பாளி பழம் நமக்கு பல மருத்துவ நன்மைகளை அளிக்கிறது. 

அதுவும் பழுக்காத காயாக இருக்கும் பப்பாளியில் கூடுதல் நன்மைகளைப் பெறலாம். 

ஆனால் அதை அப்படியே சாப்பிட முடியா விட்டாலும் இப்படி அருமையான சுவையில் கூட்டு செய்யலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் சானிடைசர்கள் !

தேவையான பொருட்கள் :

பப்பாளிக்காய் - 2 கப்

மஞ்சள் பொடி - 1/4 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

தக்காளி - 1

சிறு பருப்பு - 1/3 கப்

உப்பு - தே.அ

அரைக்க :

தேங்காய் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 1

சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

2022-ல் காத்திருக்கும் பேரழிவுகள்? யார் இந்த பாபா வங்கா?

தாளிக்க :

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

வெங்காயம் - 1

கறிவேப்பிலை/ கொத்தமல்லி - சிறிதளவு

மூக்கடைப்பை போக்கும் இயற்கை நிவாரணிகள் ! 

செய்முறை :

சுவையான பப்பாளிக்காய் கூட்டு செய்வது எப்படி?

முதலில் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் பப்பாளியின் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி போடுங்கள். 

பெண்களின் பிறப்புறுப்பு முடியை அகற்றுவது எப்படி?

அதோடு சிறு பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள், உப்பு சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

2-3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விசில் போனதும் திறங்கள். பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

அதை அப்படியே அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். 

அதே சமயம் மற்றொரு கடாய் வைத்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கூட்டில் சேர்த்துக் கிளறுங்கள். 
வணிக ரீதியிலான சேனிடைசர்களை பயன்படுத்தினால் ஏற்படும் விளைவு !

இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் பப்பாளிக்காய் கூட்டு தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)