சின்ன வெங்காய சப்பாத்தி செய்வது | Make a Little Onion Chapati !





சின்ன வெங்காய சப்பாத்தி செய்வது | Make a Little Onion Chapati !

0
தேவையான பொருட்கள் : 

கோதுமை மாவு - 1 கப்

நறுக்கிய சிறிய வெங்காயம் - 2 கப்

பச்சை மிளகாய் - 3

எலுமிச்சை சாறு - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:
சின்ன வெங்காய சப்பாத்தி செய்வது
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

கோதுமை மாவுடன் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனை மாவு கலவையுடன் சேர்த்து கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தயார் செய்யுங்கள். 

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் தேய்து வைத்த சப்பாத்தியை ஒவ்வொன்றாக போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து பரிமாறுங்கள். சூப்பரான சின்ன வெங்காய சப்பாத்தி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)