தேவையானவை:

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு – தலா 100 கிராம்,

வெங்காயம் – 2 (நறுக்கவும்),

கேரட் துருவல் – சிறிதளவு,

காய்ந்த மிளகாய் – 8, 

கொத்த மல்லி – அரை கட்டு (நறுக்கவும்),

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,

பெருங்காயம், உப்பு – சிறிதளவு.

செய்முறை:
முப்பருப்பு உருண்டை செய்முறை
பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து ஒரு மணி ஊற விட்டு… உப்பு, மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கவும்.

அரைத்த விழுதுடன் கேரட் துருவல், வெங்காயம் கலந்து பிசிறி, உருண்டை களாக்கி, 

ஆவியில் 7-ல் இருந்து 10 நிமிடம் வரை வேகவிட்டு எடுக்கவும். மேலே கொத்த மல்லி தூவி பரிமாறவும்.