ஆலு – பட்டர் பனீர் போஸ்தோ செய்முறை | Aloo - Butter Paneer Bosto Recipe !





ஆலு – பட்டர் பனீர் போஸ்தோ செய்முறை | Aloo - Butter Paneer Bosto Recipe !

0
தேவையானவை:

பனீர் – 250 கிராம்,

உருளைக் கிழங்கு – 2,

பச்சைப் பட்டாணி – 100 கிராம்,

தக்காளி – ஒன்று (அரைக்கவும்),

கசகசா – 2 டீஸ்பூன்,

தனியா – 2 டேபிள் ஸ்பூன்,

சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்,

மிளகாய் வற்றல் – 6,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

இஞ்சி விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்,

கொத்த மல்லி – சிறிதளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
ஆலு – பட்டர் பனீர் போஸ்தோ

கசகசா, தனியா, சீரகம், மிளகாய் வற்றலை வெறும் கடாயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். 

பனீரை சதுர துண்டு களாக வெட்டிக் கொள்ளவும். உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி… இஞ்சி விழுது, அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். 

இதனுடன் வேக வைத்த உருளைக் கிழங்கு, பட்டாணி, மஞ்சள் தூள், அரைத்து வைத்திருக்கும் விழுது சேர்த்து வதக்கி, கொதிக்க விடவும்.

தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, பனீர் துண்டுகளைப் போட்டு கிளறி விடவும். 

மிதமான தீயில் 10 நிமிடம் வைத்திருந்து, பின் இறக்கி, கொத்த மல்லி தூவி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)