தேவையானவை:

முழு உளுந்து – 200 கிராம்,

சுக்குப் பொடி – அரை டீஸ் பூன்,

ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை,

பொடித்த சர்க் கரை – 150 கிராம், 

நெய் (அ) வனஸ்பதி – தேவைக்கேற்ப,

வறுத்த முந்திரி, திராட்சை – சிறிதளவு.

செய்முறை:
உளுந்து மாவு உருண்டை
முழு உளுந்தை வறுத்து, மாவாக்கவும். அதனுடன் சுக்குப் பொடி, ஏலக்காய்த் தூள்,

 பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும். 

நெய் (அ) வனஸ்பதியை உருக்கி, உளுந்து மாவுக் கலவை மீது ஊற்றிக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.

இந்த ஸ்வீட் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் திருமணங் களில் தவறாமல் இடம் பெறும்.