டேஸ்டியான வால்நட் பிரவுனி ரெசிபி செய்வது எப்படி?





டேஸ்டியான வால்நட் பிரவுனி ரெசிபி செய்வது எப்படி?

0

மற்ற எல்லா வகை நட்ஸ்களையும் விட சற்று சுவையிலும் ஆரோக்கிய விஷயத்திலும் வேறுபட்டது வால்நட் என்னும் அக்ரூட். 

டேஸ்டியான வால்நட் பிரவுனி ரெசிபி செய்வது எப்படி?
இது உடலில் உள்ள அதிகப் படியான கொழுப்பை கரைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்று கூட கூறலாம். 

இந்த வால்நட்டை என்னும் அக்ரூட்டை ஊற வைத்து காலையில் சாப்பிடுவது இன்னும் கூடுதல் நன்மையைத் தரும். வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. 

அதே போல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. 

குழந்தைகளுக்கு விருப்பமான வால்நட் பிரவுனியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. பிரவுனி எல்லா வயதினருக்கும் எப்போதும் பிடித்தமானது. 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பற்றிய ரகசியம் தெரியுமா? உங்களுக்கு !

வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் கவரும் வால்நட் பிரவுனி ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் . :

பால் - 500 மிலி

மைதா மாவு - 750 கிராம்

பேக்கிங் பவுடர் - 10 கிராம்

பேக்கிங் சோடா - 10 கிராம்

வால்நட் - 220 கிராம்

டார்க் சாக்லேட் - 360 கிராம்

வெண்ணெய் - 360 கிராம்

சர்க்கரை - 260 கிராம்

பிரவுன் சுகர் - 260 கிராம்

செய்முறை : .

டேஸ்டியான வால்நட் பிரவுனி ரெசிபி செய்வது எப்படி?

வெண்ணெய், சர்க்கரை மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கீரீமாக்கவும். சாக்லேட்டை உருக்கி, அதை இந்தக் கலவையில் சேர்க்கவும். 

மாவு, வால்நட், பேக்கிங் சோடா ஆகியவற்றை இதில் கலந்து, நன்றாக பிசையவும்.

சுவையான வெந்தயக்கீரை மீன் குழம்பு செய்வது எப்படி?

இந்தக் கலவையை, பேக்கிங் டிரேவில் வைத்து, 35 நிமிடங்களுக்கு 175 டிகிரி செல்சியசில் சமைக்கவும். விருப்பமான வடிவங்களில், வால்நட் பிரவுனியை வெட்டி, வெனிலா ஐஸ்கிரீமுடன் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)