உடல் சூட்டை தணிக்க துத்தி கீரை.. வெயிலுக்கு நல்லது !





உடல் சூட்டை தணிக்க துத்தி கீரை.. வெயிலுக்கு நல்லது !

0

மூலநோய் என்றாலே அதற்கு முதன்மையான மருந்தாக கருதப்படுவது இந்த துத்திக் கீரைகள் தான். அதே சமயம் மூலநோயை தவிர வேறு எந்த பிரச்சனைகளுக் கெல்லாம் இந்த துத்திக்கீரை பயன்படுகிறது தெரியுமா?

உடல் சூட்டை தணிக்க துத்தி கீரை.. வெயிலுக்கு நல்லது !
துத்தியின் இலைகளும், வேர்களும், பூக்களும், மட்டைகளும், மருத்துவ தன்மையை கொண்டவை. இதய வடிவத்தில் உள்ள இலைகள் தித்திப்பாக இருக்கும். காய்களில் சக்கரம் போல் காய்த்து கிடக்கும்.

மூலநோய்கள்: 

மற்ற கீரைகளை போலவே, பருப்புகளில் சேர்த்து, நல்லெண்ணெய், சின்ன வெங்காயம் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தாலே மூலநோய்கள் நம்மை அண்டாது.

அல்லது மூல நோய் வந்தவர்கள், இந்த கீரையை சுத்தம் செய்து, கழுவி, விழுதாக அரைத்து, வெறும் வயிற்றில் ஒரு வாரத்துக்கு ஒரு டம்ளர் குடித்தாலே மூலநோய் குணமாகி விடும். 

இந்த இலைகளை கழுவி அரைத்து கஷாயம் போல அல்லது சூப் போல வைத்து குடித்தாலும் மூலநோய் குணமாகும். மூலச்சூடும் நீங்கி விடும். அல்லது இந்த இலையில் ரசம் வைத்து சாப்பிடலாம்.

நின்று போன இன்றைய திருமணம்... ஆசையில் மணமக்கள்.. மீட்பது எப்படி?

பாதிப்புகள் : 

விளக்கெண்ணெய்யில் இந்த இலையை வதக்கி எடுத்து, வாழையிலை அல்லது வெற்றிலையில் சேர்த்து கட்டி, மூலம் பாதிப்புகள் இருக்கும் இடத்தில் கட்டினால், எரிச்சல், வீக்கம், வலி, குத்தல் நீங்கும்.

எந்த வகையில் பயன்படுத்தினாலும், மூலத்தை விரட்டுவதில் முதன்மையானதாக துத்தி இலைகள் விளங்குகின்றன. அதே போல உஷ்ணம் சம்பந்தமான நோய்களையும் இந்த துத்தி இலைகள் விரட்டுகின்றன. 

குறிப்பாக சிறுநீர் எரிச்சலை தணிக்கும் தன்மை இந்த இலைகளுக்கு உண்டு. குடல்புண்ணை ஆற்றும் சக்தி இந்த இலைகளுக்கு உண்டு. 

உடலில் அதிக உஷ்ணம் சேர்ந்து விட்டால், பசும்பாலுடன் இந்த துத்தி கீரையை பொடி செய்து கலந்து குடித்தாலே, மொத்த உஷ்ணமும் விலகி விடும்.

கொப்புளங்கள்: 

உடல் சூட்டை தணிக்க துத்தி கீரை.. வெயிலுக்கு நல்லது !

உடம்பிற்குள் உண்டாகும் உஷ்ண கோளாறுகளை தவிர, சருமத்தில் ஏற்படும் உஷ்ண கோளாறுகளையும் இந்த துத்தி இலைகள் போக்குகின்றன. 

உடலில் கட்டிகள், புண்கள், கொப்புளங்கள் ஏற்பட்டு விட்டால், துத்தி இலைகளிலிருந்து சாறு எடுத்து, அதில் அரிசி மாவு சிறிது கலந்து, கட்டிகள் மீது கட்டினாலே போதும். அவைகள் பழுத்து உடைந்து விடும்.

அதிக உஷ்ணத்தால், பெண்களுக்கு கருப்பையில் கோளாறுகள் ஏதாவது ஏற்பட்டாலும், மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டாலும், வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்பட்டாலும், இந்த துத்தி இலைகளை, நெய்யில் வதக்கி சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வரலாம்.

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது சரியா என்று தெரியுமா?

துத்தி இலைகள்: 

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களின் பிரச்சனையும் இந்த இலை விரட்டுகிறது. துத்தி இலை, துத்தி பூ, துத்தி காய், துத்தி வேர், துத்தி வேர் என அனைத்து பாகத்தையும் கஷாயம் போல வைத்து குடித்தால், ஆண்மை அதிகரிக்குமாம்.

ஆக, உடலில் ஏற்படும் வாய்ப்புண்கள், வயிற்று புண்கள், முதல் ஆசனவாய் புண்கள், மூல நோய் கட்டிகள், சிறுநீர் எரிச்சல் என ஒட்டு மொத்த உஷ்ணத்தையும் தணிக்கும் திறன், 

இந்த துத்தி இலைகளுக்கு உண்டு என்பதால், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த கீரைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)