சர்க்கரை நோய் போக வெந்தயம் எப்படி பயன்படுத்த வேண்டும்?





சர்க்கரை நோய் போக வெந்தயம் எப்படி பயன்படுத்த வேண்டும்?

0

வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. 

சர்க்கரை நோய் போக வெந்தயம் எப்படி பயன்படுத்த வேண்டும்?
மேலும்  இதில் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் உள்ளது. இருதய பிரச்சனை, மூட்டு வலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கு நல்ல மருந்து. இதனை தினமும் ஊற வைத்து சாப்பிடலாம். 

அல்லது அப்படியே தண்ணீர்  கொண்டு முழுங்கலாம். நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களின் டயட்டில் ஏதாவது ஒரு வகையில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது அவசியம். 

இதனை பொடித்து மோருடன் கலந்து  சாப்பிடலாம். வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் தெறித்தோடி விடும். 

உங்களுக்கு வந்திருப்பது மாரடைப்பா அல்லது பயமா? வித்தியாசம் என்ன?

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க கீழே கொடுக்கப் பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தவறாமல் பின்பற்றவும்.

தேவையான பொருட்கள் : .

வெந்தயம்

முருங்கை பூ

துளசி

கருஞ்சீரகம்

செய்முறை : .

சர்க்கரை நோய் போக வெந்தயம் எப்படி பயன்படுத்த வேண்டும்?

வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் 1 தேக்கரண்டி அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு முருங்கை பூ மற்றும் துளசி சிறிதளவு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முதலில் முருங்கை பூ மற்றும் துளசியை நிழலில் காய வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுக்கவும். பிறகு இதை நன்கு ஆற விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

அரைத்த துளசி, முருங்கை பூ பொடி மற்றும் வெந்தயம், கருஞ்சீரகப் பொடியை ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

மரு எவ்வாறு உருவாகின்றன? சித்த மருத்துவம் சொல்வது என்ன?

பயன்படுத்தும் முறை : .

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து மிதமான தீயில் காய்ச்சவும்.

தண்ணீர் 1/2 டம்ளர் அளவு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

குறிப்பு . :

வெந்தயத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதால் இருமல், அலர்ஜி, வயிற்றுப்போக்கு, மூக்கடைப்பு, வீக்கம், வாயு, துர்நாற்றம் வீசும் சிறுநீர் போன்ற பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

குறிப்பாக இந்த மூன்று உடல் சார்ந்த பிரச்னைகளை எதிர் கொள்பவர்கள் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)