குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் பஜ்ரா பணியாரம் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் பஜ்ரா பணியாரம் செய்வது எப்படி?

0

கம்பு நீரிழிவு நோய்க்கு சிறந்தது. கம்பில் கார்போ ஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை பொறுமையான செரிமானம் நடைபெற உதவுகிறது. இதனால் குளுக்கோஸை நீண்ட நாட்களுக்கு சரியான அளவில் பராமரிக்கிறது. 

குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் பஜ்ரா பணியாரம் செய்வது எப்படி?
எனவே கம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பை குறைக்கும் பொருட்கள், இதய நோயாளிகளுக்கு சிறந்தது.

சிலியாக் நோய்கள் எனப்படும் குளுட்டன் அழற்சி மற்றும் குளுட்டன் ஏற்றுக் கொள்ளாமைக்கு சிறந்தது. இது குளுட்டன் ஃப்ரியாக இருப்பதால் இதை எல்லோருக்கும் பொருந்துகிறது.

வயிற்றில் உள்ள அசிடிட்டியை போக்குகிறது. இதனால் அல்சர் ஏற்படாமல் தவிர்க்கப் படுகிறது. சிறந்த குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. 

இதை அவ்வப்போது எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் நீங்குகிறது. அதற்கு காரணம் இது நார்ச்சத்து நிறைந்த உணவாக உள்ளது. சரி இனி கம்பு, பச்சரிசி பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் பஜ்ரா பணியாரம் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.

தேவையான பொருட்கள் . :

இட்லி அரிசி - ஒரு கப்

பச்சரிசி - அரை கப்

கம்பு - ஒரு கப்

கருப்பு உளுந்து - அரை கப்

வெந்தயம் - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - பனியாரம் பொரிக்க தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள் . :

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை, மல்லித்தழை - கைப்பிடியளவு

கடுகு - கால் ஸ்பூன்

உளுந்து - அரை ஸ்பூன்

கடலை பருப்பு - அரை ஸ்பூன்

தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை . :

குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் பஜ்ரா பணியாரம் செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கம்பு சேர்த்து தண்ணீரில் மூன்று முறை கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் கருப்பு உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து கழுவி சிறிது தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் கிரைண்டரில் ஊற வைத்த உளுந்தை சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக பொங்கும் வரை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு ஊற வைத்த அரிசி கம்பை சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவை பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கைகளால் கலந்து மூடி வைக்க வேண்டும். எட்டு மணி நேரம் மாவை புளிக்க வைக்க வேண்டும். பின்னர் மீண்டும் ஒருமுறை கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, பொன்னிறமானவுடன், கறிவேப்பிலை, மல்லி சேர்த்து, பொரிந்தவுடன், 

அதில் பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி, தேங்காய் துருவல் தூவி இறக்க வேண்டும். அதை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பனியார சட்டியை மிதமான சூட்டில் காய வைத்து உங்களது விருப்பம் போல பனியாரங்களை ஊற்றி எடுக்க வேண்டும். இதை அப்படியே தோசைக்கல்லில் தோசையாகவும் ஊற்றி எடுக்கலாம்.

தோசைபோல கனமாகவோ அல்லது முறுகல் தோசை போல மெலிதாகவோ விட்டு நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சிவந்து வரும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். ஆரோக்கியமான கம்பு பனியாரம் மற்றும் தோசை தயார். 

குறிப்பு . :

வெங்காயம், தக்காளி, தேங்காய், புதினா, மல்லி என எந்த சட்னியுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம். சாம்பார் அல்லது குருமாவும் இதற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)