டேஸ்டியான இஞ்சி பால் தயார் செய்வது எப்படி?





டேஸ்டியான இஞ்சி பால் தயார் செய்வது எப்படி?

0

இதைக் குடிப்பதால் கை-கால் வலி, முதுகு வலி, ரத்த பற்றாக்குறை, உடல் பலவீனம், உடல சோர்வு, உடல் பருமன் எதுவுமின்றி 80 வயதிலும் 20 வயது போல் ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்புடனும் வாழலாம். 

டேஸ்டியான இஞ்சி பால் தயார் செய்வது எப்படி?
அந்தளவுக்கு ஒரு அற்புதமான டிப்ஸ் இது. மேலும் அஜீரண கோளாறு, வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், கால்சியம் குறைபாடு ஆகியவற்றையும் சரி செய்யும்.

தேவையான பொருட்கள் . :

பால் - ஒரு டம்ளர் (காய்ச்சியது அல்லது காய்ச்சாதது எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்)

சோம்பு - ஒரு ஸ்பூன்

பனங்கற்கண்டு - ஒரு ஸ்பூன்

இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை . :

டேஸ்டியான இஞ்சி பால் தயார் செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் காய்ச்சிய பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலர் பால் பிடிக்காது என்று கூறுவார்கள். ஆனால் நாம் அன்றாட வாழ்வில் பால் சேர்த்துக் கொள்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். 

உடலுக்கு தேவையான கால்சியத்தை இந்த பால் வழங்குகிறது. பசும்பால் கிடைத்தால் நல்லது. பால் பிடிக்கா விட்டால் பால் சம்மந்தப்பட்ட உணவை தினமும் சேர்த்துக் கொள்வது நல்லது.

பாலை அடுப்பில் வைத்து அதில் சோம்பையும் சேர்க்க வேண்டும். சோம்பு வெறும் வாசனை பொருள் மட்டுமல்ல, அது வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு ஆகிய பிரச்னைகளையும் தீர்க்கிறது.

ஆளை அமைதியாக கொல்லும் அலுமினிய பாத்திரங்கள் !

பின்னர் சுத்தம் செய்த இஞ்சி ஒரு துண்டு சேர்க்க வேண்டும். அஜீரண கோளறை சரி செய்யும். உடலில் இருக்கக் கூடிய நச்சுக்களை வெளியேற்றும். ரத்தத்தை சுத்திகரிக்கும். 

வாயுத் தொல்லையை சரி செய்யும். இஞ்சியை எப்போதும் தோல் நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும். இதை நன்றாக 5 நிமிடம் கொதிக்க விட்டு, வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் சாறு பாலில் இறங்க வேண்டும்.

இதில் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு என எதுவேண்டுமானாலும் சேர்த்து பருகலாம். பால் ஆறியபின் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பால் திரிந்து விடும். 

இந்தப்பாலை இரவில் அருந்தும் போது, இஞ்சிக்கு பதில் சுக்குப்பொடி சேர்த்து பருக வேண்டும். காய்ந்த இஞ்சி தான் சுக்குப்பொடி. காலையில் பருகும் போது இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு : .

டேஸ்டியான இஞ்சி பால் தயார் செய்வது எப்படி?
குளிர்காலத்தில் ஏற்படும் சளித்தொல்லை மற்றும் சுவாசகோளாறுகள் ஏற்படும் அல்லது ஆஸ்துமா நோயாளிகள் அதிகம் அவதிப் படுவார்கள். அவர்கள் அதிகம் சோம்பு எடுத்துக் கொள்வது நல்லது. 

அவர்களுக்கு அந்த பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். குழந்தைபெற்ற தாய்மார்கள் அதிகளவில் சோம்பு எடுத்துக் கொள்ளும் போது, அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். 

சர்க்கரை நோயாளிகளுக்கு இது அருமருந்தாகவும் உள்ளது. சோம்பில் அதிகளவில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. அது உடலில் உள்ள ரத்தச் சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரிக்கிறது.

8 மணிநேர தூக்கம் ஏன் அவசியம் என்று தெரியுமா? 

உடலில் உள்ள நீர் கோர்க்கும் குறிப்பாக திசுக்களில் நீர் கோர்க்கும் போது அவர்களுக்கு உடலில் சோர்வு மற்றும் வலி, அசதி ஆகியவை ஏற்படும். அவர்கள் சோம்பு எடுத்துக் கொள்ளும் போது அவை நீங்கும்.

கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி அதை சுத்தம் செய்ய உதவுகிறது. நமது நரம்புகளுக்கு வலு சேர்க்க உதவுகிறது. ஏனெனில் இதில் நிறைய கால்சியம் மற்றும் மெக்னீசிய சத்துக்கள் உள்ளது. 

உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் இது வழங்குகிறது. இதை வாரத்து இரண்டு முறை எடுத்துக் கொண்டாலே போதும் உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

உடலில் வாயுத்தொல்லை இருக்காது. நரம்பு மண்டலம் வலுப்பெறும். வயிறு உப்புசம் இருக்காது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும். வயிறை நன்றாக சுத்தம் செய்யும். 

உடலை ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும். எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். கட்டாயம் பருகி பலன் பெறுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)