மீன் கழுவும் போது அதன் துர்நாற்றத்தை போக்க சில டிப்ஸ் !

மீன் கழுவும் போது அதன் துர்நாற்றத்தை போக்க சில டிப்ஸ் !

0

இயற்கையான சில பொருட்களை பயன்படுத்தி, மீனில் துர்நாற்றத்தை போக்கலாம். மீனை வாங்கும் போது சரியாக பார்த்து வாங்கினால் அதிகப்படியான துர்நாற்றம் ஏற்படாமல் தவிர்கலாம். 

மீன் கழுவும் போது அதன் துர்நாற்றத்தை போக்க சில டிப்ஸ் !
அதாவது, மீனின் வயிற்றுப் பகுதி திடமாக இல்லாமல், தொட்டால் நசுங்குவது போல இருந்தால் மீன் எளிதில் கெட்டுவிடும் என அறிந்துக் கொள்ளலாம்.

மீனை வாங்கும் போது அதன் செதிலை தூக்கி பார்க்க வேண்டும். அது நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும் பட்சத்தில் அது நல்ல மீன். 

ப்ரவுன் நிறத்திலோ காணப்பட்டால் பழைய மீன் என்று அர்த்தம். அடர்ந்த க்ரே நிறத்திலோ காணப்பட்டால் அது கெட்டு போகும் நிலையில் உள்ள மீன் என்று அர்த்தம்.

எப்படி புயலுக்கு பெயர் சூட்டுகிறார்கள்?

அதும் இப்பொழுதெல்லாம் ஐஸ்ஸில் வைப்பதால் அறிவது சற்று கடினமே. இயற்கையாகவே மீனின் கவுச்சி தன்மையை நீக்க ஒரு சிறந்த வழி.. 

வாங்கி வந்த மீனின் இரு பக்கத்தையும் கல்லின் மேல் தேய்த்தால், நாம் அதன் தோலில் உள்ள ஒட்டுண்ணிகளை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், மீன் சேற்றில் இருந்து பிடிபட்டிருந்தால் துர்நாற்றத்தையும் போக்கலாம்.

மீனின் செவில் பகுதி அதிகப்படியான அழுக்குகளை கொண்டது. மீனின் செவிலானது நீரை வடிகட்டுவதால், அதில் சேறு மற்றும் நீர் கழிவு அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. 

அதனால் கூட துர்நாற்றம் வீசலாம். கடைகளில் கட் பண்ணி தான் கொடுக்கிறார்கள்… அதும் கடமைக்கு சுத்தம் செய்கிறார்கள் ! அதனால் இரண்டு அல்லது மூன்று முறை நீங்கள் கழுவிக் கொள்வது மிகவும் நல்லது. 

மீன்+ 4 ஸ்பூன் கல் உப்பு + 2 டம்ப்ளர் ராகி அல்லது ஆரிய மாவு இவற்றை ஒன்றாக கையால் கலந்து நீரில் கழுவினால், மீனின் துர்நாற்றம் போவது மட்டுமல்லாமல் மீன் பளபள வென்றும் இருக்கும்.

ஏனென்றால், உப்பு கிருமி நாசினியாக செயல்பட்டு கிருமிகளை அழிக்கிறது. அதே வேளையில் ராகி மாவு மீனின் அனைத்து பகுதிகளிலும் சென்று தேவையில்லாத அழுக்குகளுடன் ஒட்டிக் கொள்வதால், நீரில் கழுவும் போது ராகி மாவு அழுக்கை வெளியேற்றுகிறது.

எலுமிச்சை சாறு கலந்த நீரில் கழுவினாலும் அதன் வாசனை இருக்காது. 

மீன் கழுவும் போது அதன் துர்நாற்றத்தை போக்க சில டிப்ஸ் !

மீனை வெட்டிய பின்பு அதை நன்றாக கழுவி பின்பு குடல் மற்றும் உடல் உறுப்புக்கள் இருக்கும் பகுதியை பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷை கொண்டு தேய்த்துக் கழுவினால் இன்னும் விரைவாக வாசனை அகலும். 

மீன் சமைத்த பின்பு கைகள், சமையல் பாத்திரம் மற்றும் கத்தி மற்றும் பாத்திரம் கழுவும் தொட்டி மீன் வாசனை இருக்கும் அதை எலுமிச்சை பழம் சாறு கொண்டு கழுவினால் வாசனை இருக்காது. 

ஊட்டச்சத்து பானங்கள் நம் உயரம் கூட்டுமா?

உணவுப் பொருட்களில் வேதிப் பொருட்களை கொண்டு கழுவக் கூடாது.

இன்றைக்கு ஞாயிற்று கிழமை எப்படியும் யாரேனும் மீன் எடுப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்… இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)