பாதாம் டிரிங் மிக்ஸ் வைத்து கிரீம் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

பாதாம் டிரிங் மிக்ஸ் வைத்து கிரீம் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

0

ஐஸ்கிரீம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதோடு சுலபமாக பாதாம் டிரிங் மிக்ஸை வைத்து வீட்டிலேயே எப்படி ஐஸ்கிரீம் செய்து சாப்பிடுவது என்பதை பார்க்க இருக்கிறோம். 

பாதாம் டிரிங் மிக்ஸ் வைத்து கிரீம் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் சாப்பிடுவது வரை விரும்பி சுவைப்பது ஐஸ்கிரீம் தான். மூன்று பொருட்களை வைத்து சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார் செய்து சாப்பிட இருக்கிறோம். 

விரும்பிய நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட தோன்றும் போதெல்லாம் இப்படி வீட்டில் செய்து வைத்திருக்கும் ஐஸ்கிரீம்களை எடுத்து சுவைத்து உண்ணும் பொழுது உணவின் மேல் இருக்கும் விருப்பம் நமக்கு தீர்ந்து விடும். 

கடைக்கு சென்று வாங்க வேண்டுமே என்று எண்ணம் உள்ளவர்கள் எல்லாம் இது போன்று செய்து வீட்டில் வைத்துக் கொண்டால் நம்ம விருப்பம் போன்று எடுத்து உண்ணலாம். 

அது மட்டும் அல்ல  வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் ஐஸ்கிரீம்களை கொடுத்து மகிழ்விக்கலாம். இந்த சுவையான பாதாம் ஐஸ்கிரீமை உங்கள் விருப்பம் போல் இதில் நீங்கள் பாதாம் பிஸ்தா போன்றவற்றை கூட சேர்த்துக் கொள்ளலாம். 

ஆன்டிபயாடிக் எடுத்துக் கொண்ட மருத்துவர் தற்கொலை... எச்சரிக்கை செய்தி !

மேலும் விருப்பம் இருப்பவர்கள் ஜெர்ரி போன்றவற்றையும் இந்த பாதாம் ஐஸ்கிரீம் சேர்த்து செய்து சாப்பிடும் பொழுது அவை மேலும் அதீத ருசியை நமக்கு கொடுக்கும். 

சுலபமாக வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சுவையான கிரீமியான ஐஸ்கிரீமை வீட்டில் செய்து குடும்பத்தாரோடு அமர்ந்து உண்ணும் பொழுது அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையே இருக்காது. 

ஆகையால் இந்த பாதாம் டிரிங்க் ஐஸ்கிரீமை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள் . : 

பால் - 1/2 லிட்டர் 

பாதம் - 5 ஸ்பூன் 

டிரிங்ஸ் மிக்ஸ் பவுடர்

சோளமாவு -  2 ஸ்பூன் 

காய்ச்சிய பால் - 100 மில்லி 

செய்முறை . :

பாதாம் டிரிங் மிக்ஸ் வைத்து கிரீம் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

முதலில் ஒரு பாத்திரத்தில்  பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். பாத்திரத்தில்  நன்றாக கொதிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் சோளமாவுடன்  100 மில்லி காயச்சி ஆற வைத்த பாலை ஊற்றி நன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.  

பின் கொதித்து கொண்டிருக்கும் பாலில்  கட்டிகள்எதுவும் இல்லாமல் கலந்து வைத்துள்ள சோள மாவு பால் கரைசலை பாலில் கலந்து நன்றாக கிளறி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும்.  

பால் நன்றாக கொத்தித்த பிறகு   பாதாம் டிரிங்ஸ் மிக்ஸ் 5 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும்.  சோள மாவும் பாதாம் டிரிங்ஸ் மிக்ஸ் பவுடரும் கலந்ததால்  பால் சீக்கிரமே திக்காக மாறி வரும். 

ஆகையால் நன்றாக கை விடாமல் கிளறி  கொண்டே  இருக்க வேண்டும்.  பால் நன்றாக திக் ஆனதும் பாலை நன்றாக ஆற வைக்க வேண்டும்.  

ஆறிய பாலை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து ஒர் காற்று புகாத பாக்ஸில் போட்டு வைத்து ப்ரீஸ்சரில் 2 மணி நேரம் வைக்க வேண்டும். 2 மணி யநேரம் கழித்து எடுத்து மூடியை திறந்து பார்த்தால் ஐஸ்கிரீம் பதம் வர ஆரம்பித்தது இருக்கும்.  

கட்டடத்திற்குள் புகுந்து செல்லும் ரயில் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

இப்போது மீண்டும் 2 மணி நேரம் ப்ரீஸ்சரில் வைத்த ஐஸ்கிரீமை மீண்டும் மிக்ஸிஜாரில் சேர்த்து அரைத்து மீண்டும் அதே காற்று புகாத பாக்ஸில் போட்டு 8 மணி நேரம் ப்ரீஸ்சரில் வைக்கும் வேண்டும்.  

இதை நீங்கள் மதிய நேரத்தில் செய்தால்  இரவுமுழுக்க  ப்ரீஸ்சரில் வைத்தால் காலை சாப்பிடுவதற்கு சரியாக இருக்கும். எட்டு மணி நேரம் கழித்து ப்ரீஸ்சரில் இருக்கும் பாக்ஸ்ஸை எடுத்து மூடியை திறந்தால் ருசியான பாதாம் ஐஸ்கிரீம் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)