தீபாவளிக்கு ருசியான மில்க் பவுடர் லட்டு செய்வது எப்படி?





தீபாவளிக்கு ருசியான மில்க் பவுடர் லட்டு செய்வது எப்படி?

0

உங்களுக்கு அவ்வளவாக இனிப்பு பலகாரங்கள் செய்ய வராதா? எது செய்தாலும் எதாவது சொதப்பல் நடந்து விடுகிறதா? இந்த காரணத்தினாலே பண்டிகை நாட்களில் கூட வீட்டில் பலகாரங்கள். 

தீபாவளிக்கு ருசியான மில்க் பவுடர் லட்டு செய்வது எப்படி?
அப்படியானால் அத்தகையான வர்களுக்கு ஈஸியான ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். பால் பால் பௌடரை வைத்து சுவையான ஸ்வீட் லட்டு எப்படி செய்வது என்று கீழே கொடுத்துளோம். 

அதனை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சாப்பிட்டவுடன் ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?

தேவையான பொருட்கள் . : 

பால் பவுடர் - 2 கப் 

பால் - ¼ கப் 

சர்க்கரை -  ¼ கப்  

ட்ரை தேங்காய் பொடி - சிறிதளவு 

முந்திரி, ஏலக்காய் - விருப்பப்படி 

நெய் - 2 டீஸ்பூன் 

செய்முறை . :

தீபாவளிக்கு ருசியான மில்க் பவுடர் லட்டு செய்வது எப்படி?

முதலில் கடாயில் நெய் ஊற்றி டீஸ்பூன் வறுத்து எடுத்துக் கொள்வோம்.  அதே வாணலியில் அடுப்பில் வைத்து ¼ கப் பால், ¼ கப் சர்க்கரை சேர்த்து அதில் ஏலக்காய் பொடி போட்டு 2 கப் பால் பவுடர் செக்கவும்.  

நன்கு கட்டி தட்டாமல் கிளறவும். பிறகு வறுத்த முந்திரி மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி கடாயில் ஒட்டாத அளவு கிளறி விடவும்.  நன்றாக திரண்டு வரும் வரை கிளறி விடவும்.  

பச்சைக்குத்திக் கொள்வதால் என்னென்ன தீமைகள் உண்டாகிறது?

திரண்டு வந்த பிறகு அடுப்பை நிறுத்தி, லேசான சூட்டில் நெய் தடவி பிசைந்து உருண்டைகளாக உருட்டி ட்ரை தேங்காய் பொடியாய் மேல தேய்த்து உருண்டை பிடிக்கவும்.  இப்பொழுது சுவையான பால் பவுடர் லட்டு தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)