சுட சுட அருமையான அப்பள பஜ்ஜி செய்வது எப்படி?

சுட சுட அருமையான அப்பள பஜ்ஜி செய்வது எப்படி?

0

இன்று நாம் மாலை நேரங்களில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் ஒரு ஸ்நாக்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். 

சுட சுட அருமையான அப்பள பஜ்ஜி செய்வது எப்படி ?
ஆம் இன்று தான் சுவையான அப்பள பஜ்ஜி செய்து பார்க்க போகிறோம். நீங்கள் உங்களுக்கு குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் மாலை நேரங்களில் டீ காபி கொடுக்கும் பொழுது இது போன்ற அப்பள பஜ்ஜி செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். 

அதே நேரம் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சுட சுட கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு மெறுகலாக அசத்தலான சுவையில் இருக்கும். 

ஆகையால் இன்று இந்த சுவையான அப்பள பஜ்ஜி செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

முளைக்கட்டிய தானிய வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் . : 

கடலை மாவு - 200 கிராம் 

அரிசி மாவு -  80 கிராம் 

வட்ட வடிவ உளுந்து அப்பளம் -  12 

மிளகய் தூள் - 2 tsp 

சமையல் சோடா தூள் - 1 சிட்டிகை 

உப்பு - சிறிதளவு 

சூடான எண்ணெய் - 1 tsp

தண்ணீர் - தேவையான அளவு 

கலர் பொடி - 1 சிட்டிகை தேவைப்பட்டால் 

செய்முறை  . :

சுட சுட அருமையான அப்பள பஜ்ஜி செய்வது எப்படி ?

முதலில் நாம் எடுத்து கொண்ட அப்பளத்தை இரண்டாக வெட்டி கொள்ளுங்கள் இல்லை அப்படியே முமுவதுமாக உங்களுக்கு ஏற்றார் போல் வைத்து கொள்ளுங்கள்.  

பின்பு ஒரு பெரிய பவுளில் 200 கிராம் அளவு கடலை மாவு, 100 கிராம் அளவு அரிசி மாவு, சிறிதளவு உப்பு, கால டீ ஸ்பூன் பெருங்காயத் தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு சிட்டிகை சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.  

பின் நாம் கலந்து மாவில் ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய் விட்டு கைகளால் நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளுங்கள்.  

சில்லி முட்டை மசாலா செய்வது எப்படி?

பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் பஜ்ஜி பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக ஏறிய விட்டு, எண்ணெய் காய்ந்ததும்.  

பின்பு நாம் கரைத்து வைத்திற்கும் பஜ்ஜி மாவில் நாம் வைத்திற்கும் அப்பளத்தை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் சேர்த்து பஜ்ஜி பொரிந்து நன்கு உப்பி வரும் வரை பொரித்து எடுத்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் சுவையான அப்பள பஜ்ஜி தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)