மொறு மொறு தோசை வேண்டுமா? மெத்தென்ற தோசை வேண்டுமா? இதோ டிப்ஸ் !





மொறு மொறு தோசை வேண்டுமா? மெத்தென்ற தோசை வேண்டுமா? இதோ டிப்ஸ் !

0

தோசைக்கு அரிசி உளுந்து ஊற வைக்கும் போது சிறிது வெந்தயம் சேர்த்தால் மெத்தென்ற தோசை கிடைக்கும். முறுகலான தோசை வேண்டுமா வெந்தயத்திற்கு பதில் துவரம் பருப்பு சேர்த்தால் முறுகலான தோசை கிடைக்கும்.

மொறு மொறு தோசை வேண்டுமா? மெத்தென்ற தோசை வேண்டுமா? இதோ டிப்ஸ் !
முறுகலான ரவா தோசை வார்க்க சிறிது அரிசி மாவு ரவை சமமாக எடுத்து ஒரு மேஜை கரண்டி கடலை மாவு அல்லது வறுத்து அரைத்த உளுத்த மாவு சேர்த்து தோசை வார்த்தால் மொறு மொறு தோசை கிடைக்கும்.

மிருதுவான தோசை வேண்டுமா  ஒரு கைப்பிடி சாதத்தை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அடித்து மாவில் சேர்த்து பார்த்தால் மிருதுவாய் தோசை வரும். சாதம் வடித்த கஞ்சியை சிறிதளவு மாவில் கலந்து வார்த்தாலும்  பட்டு பட்டாய் தோசை வரும்..

ஜிம்முக்கு போனால் போதுமா? இந்த உணவுகளையும் சாப்பிடுங்க !

கரைத்த தோசைக்கு தண்ணீருக்கு பதில் புளித்த மோரை கலந்து வார்த்தால் சுவையாக இருப்பதோடு நல்ல பிரவுன் கலரில் தோசை வரும். 

சிறிதளவு உளுத்தம் பருப்பை ஊற வைத்து கோதுமை மாவுடன் கலந்து தோசை வார்த்தால் சுவையே சுவை.

மொறு மொறு தோசை வேண்டுமா? மெத்தென்ற தோசை வேண்டுமா? இதோ டிப்ஸ் !

கோதுமை மாவை கரைத்து தோசை வார்க்கும் முன் மாவில் சிறிது எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு வெங்காயம் கறிவேப்பிலை சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து மாவில் கலக்கினால் கோதுமை தோசை அருமையாக இருக்கும்..

இரவில் ஸ்வெட்டர் அணிந்து தூங்குவது நல்லதா?

தோசைக்கு அரைத்த மாவில் 50 கிராம் கொத்துக் கடலையும் 50 கிராம் பட்டாணியும் சேர்த்து ஊற வைத்து அரைத்து எடுத்து தோசை மாவுடன் சேர்த்து தோசை வார்த்தால் முறு முறு என்று இருப்பதோடு சத்தும் கிடைக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)