கிச்சன் சிங்க் துர்நாற்றம் அடிக்கிறதா? இதோ சில டிப்ஸ் !

கிச்சன் சிங்க் துர்நாற்றம் அடிக்கிறதா? இதோ சில டிப்ஸ் !

0

சமையலறையில் துர்நாற்றம் வீசினாலே சிங்கை சுத்தம் செய் என்று தான் சொல்வோம். ஏனென்றால் சாப்பிட்ட பாத்திரத்தை அப்படியே அதில் போடுவதால் இது போன்ற துர்நாற்றம் வீசுகிறது. 

கிச்சன் சிங்க் துர்நாற்றம் அடிக்கிறதா? இதோ சில டிப்ஸ் !

பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதால் ஒரு நாள் கழித்து கூட பாத்திரங்களை கழுவுவார்கள். இதனால் அதிக துர்நாற்றம் வீசும். இந்த நாற்றம் நாம் வீட்டிலேயே இருக்க முடியாத அளவிற்கு இருக்கும். 

நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள் தெரியுமா?

என்ன தான் பாத்திரங்களை கழுவி விட்டாலும் கூட சில சமயங்களில் துர்நாற்றம் வீசும். இந்த அசௌகரியத்தை தடுக்க இதோ சில வழிமுறைகளை பார்க்கலாம்.

முதலில் உங்கள் கிச்சனில் இருக்கும் சிங்க் தொட்டியில் பேக்கிங் சோடாவை தெளிக்கவும். 5 நிமிடங்களுக்கு பிறகு சிங்க் தொட்டியை பிரஷ் வைத்து நன்கு தேய்க்கவும். 

குச்சியை வைத்து துளைகளிலும் நன்கு குதித்து விடவும். இறுதியாக தண்ணீரை திறந்து விட்டால் போதும். மொத்த அழுக்கும் வெளியேறி சிங்க் சுத்தமாக மாறி விடும். 

துர்நாற்றமும் வீசாது. சிங்க் தொட்டியில் வீசும் துர்நாற்றத்தை நீக்க ஆரஞ்சு பழத் தோலையும் பயன்படுத்தலாம். சிங்க் முழுவதும் ஆரஞ்சு தோலை தேய்த்து விடவும். 

சிறிது நேரம் இப்படியே ஊற விட்டு பின்பு தண்ணீரை திறந்து விடும். மொத்த துர்நாற்றமும் பறந்து போய் விடும். சிங்க் தொடியில் வீசும் துர்நாற்றத்தை போக்கும் மற்றொரு எளிதான வழி நாப்தலீன் உருண்டைகள். 

இதை சிங்கில் போட்டு வைத்தால் அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

இரத்த அழுத்த நோயை சைலண்ட் கில்லர் என்று சொல்ல காரணம் என்ன?

உங்கள் கிச்சன் சிங்க் தொட்டியில் துர்நாற்றம் வீச ஆரம்பித்தால் அதை சரி செய்ய உடனே வெள்ளை வினிகரை கொண்டு சிங்க் தொட்டியை சுத்தம் செய்யுங்கள். உடனடி தீர்வு கிடைக்கும்.

எலுமிச்சை தோல்களை தூக்கி எறிவதற்கு பதிலாக, உங்கள் சிங்க் தொட்டியில் வீசும் துர்நாற்றத்தை போக்க பயன்படுத்தலாம். பயன்படுத்திய எலுமிச்சை பழத்தின் தோலில் உப்பு தடவி சிங்க் தொட்டி முழுவதும் தேய்த்து விடவும். 

கிச்சன் சிங்க் துர்நாற்றம் அடிக்கிறதா? இதோ சில டிப்ஸ் !

இதனால் துர்நாற்றம் குறைந்து நல்ல வாசனை வரத்தொடங்கும். சிங்க் தொட்டியில் வீசும் துர்நாற்றத்தை நீக்க முதலில் சிங்க் தொட்டியை சுத்தம் செய்து விட்டு அதில் மிளகுக்கீரை எண்ணெயை தெளித்து விடவும். 

மிளகுக் கீரை எண்ணெய் கிடைக்கவில்லை என்றால் புதினா இலைகளையும் சிங்க் தொட்டியில் தேய்த்து விடலாம். இது நல்ல வாசனையை பரப்பும்.

கோதுமையை அதிகம் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

பல வீடுகளில் சாக்கடையை முறையாக சுத்தம் செய்யாததால் சிங்க் தொட்டியில் துர்நாற்றம் வீசுகிறது. இது போன்ற சமயங்களில் முதலில் முறையாக சாக்கடையை சுத்தம் செய்யுங்கள். துர்நாற்றம் அதுவாகவே குறைந்து விடும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)