இஞ்சி காய்ந்து விடாமல் ஸ்டோர் பண்ணி வைக்க சில டிப்ஸ் !





இஞ்சி காய்ந்து விடாமல் ஸ்டோர் பண்ணி வைக்க சில டிப்ஸ் !

0

இஞ்சி வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு அற்புத மருந்தாகும். பலரும் அனைத்து உணவுகளிலும் இஞ்சி சேர்ப்பதை வழக்கமாக வைத்திருப்பர். 

இஞ்சி காய்ந்து விடாமல் ஸ்டோர் பண்ணி வைக்க சில டிப்ஸ் !
இஞ்சி டீ, இஞ்சி காபி, தண்ணீரில் இஞ்சி என அனைத்திலும் இஞ்சியை கலப்பார்கள். ஆனால் அப்படிப் பட்டவர்களுக்கு தற்போது ஒரு சிக்கல் நிலவியுள்ளது. 

தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிலும் காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இஞ்சிக்கு மட்டும் என்ன விதிவிலக்கா அதுவும் எகிறியுள்ளது. 

சுவையான கோஸ் தொக்கு செய்வது எப்படி?

இதனால் பொதுமக்கள் இஞ்சியை கம்மி விலைக்கு குறைவான அளவே வாங்குகிறார்கள். இஞ்சியை பொதுவாக தினசரி 5 ரூபாய்க்கு பலரும் வாங்குவார்கள். 

தற்போது விலை வாசி ஏறியதால் தினமும் இஞ்சி வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அப்படி வாங்கிய இஞ்சியும் சீக்கிரமே காய்ந்து சுக்கு ஆகி விடுகிறது. இதனை தடுக்க சில வழிமுறைகளை பார்க்கலாம்.

காகிதம்/ டிஷ்யூ : 

இஞ்சியை சேமிப்பதற்கான மிகவும் பிரபலமான முறைகளில் இதுவும் ஒன்றாகும்.  

முதலில் இஞ்சியை நன்றாகக் கழுவி உலர வைத்து, பேப்பர் டவலில் போர்த்தி காற்றுப் புகாத பெட்டியில் வைத்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ஈரப்பதம் அல்லது காற்றைத் தவிர்க்க பிரீஸிரில் வைத்து பயன்படுத்தலாம்.

வினிகர்: 

ஒரு டப்பாவில் வினிகர் ஊற்றி அதில் பிரெஷான இஞ்சியை தோலுரித்து, துண்டுகளாக வெட்டி போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு வரும். வினிகர் இல்லாதவர்கள் எலுமிச்சை சாறு வைத்தும் பயன்படுத்தலாம். 

இந்த செயல்முறை பாக்டீரியா, கிருமிகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிக்க உதவுவதால் இஞ்சியை நீண்ட நாட்களுக்கு சுக்காக மாறாமல் பாதுகாக்கும்.

டேஸ்டியான தேங்காய்ப்பால் பானம் செய்வது எப்படி?

இஞ்சி பேஸ்ட்: 

வீட்டிலேயே இஞ்சி பேஸ்ட்டை தயார் செய்து, அதை ஃப்ரீசரில் வைத்து நீண்ட நாட்களுக்கு சேமிக்கவும். இஞ்சியை சுத்தம் செய்து தோலுரித்து, சிறிது உப்பு சேர்த்து பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம். 

சுவையை அப்படியே வைத்திருக்க, இஞ்சி விழுதை காற்று புகாத டப்பாவில் வைத்து சேமிக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)