கோதுமையை அதிகம் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

கோதுமையை அதிகம் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

0

அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது. 

கோதுமையை அதிகம் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
மேலும் மைதா சாப்பிடுவதை விட, கோதுமை சாப்பிட்டால் தான் நல்லது என்று முன்னோர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பி, உண்மையில் அதில் என்ன உள்ளது என்று தெரியாமல் சாப்பிடுவார்கள்.

மேலும் தற்போது பெரும்பாலானோர் கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைத் தான் அதிகம் சாப்பிடுகிறார்கள். 

நீரிழிவு நோயாளிகள், உணவில் கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சேர்த்து வருவது நல்லது. இவை இன்சுலின் சுரப்பை சீராக வைப்பதற்கு உதவுகிறது.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்?

கோதுமையில் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன, இவை புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. எனவே கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது நல்லது.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தியை சாப்பிட்டு வந்தால், 

அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றில் செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவுகிறது.

கோதுமையை அதிகம் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் என்று பலருக்கும் தெரியும். 

எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மைதாவை தவிர்த்து, கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது.

இதய நோய் உள்ளவர்கள், கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால், இதயம் வலிமையாக இருக்கும். 

புற்று நோய் ரத்தப் பரிசோதனை - வரமா? வணிகமா?

கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படாதவாறு பாதுகாக்கும்.

கோதுமையில் நார்ச்சத்து உள்ளது. கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் எளிதில் செரிமானமாகும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாது.

தற்போது நிறைய மக்கள் தைராய்டினால் அவஸ்தைப்படுகின்றனர். அத்தகையவர்கள் கோதுமையை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.

கோதுமையை அதிகம் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள், கோதுமை உணவை அதிகம் சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். 

ஏனெனில் கோதுமையில் உள்ள குறிப்பிட்ட வைட்டமின்கள் வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும். 30 வயதிற்கு மேல் சிறுநீரக பிரச்சனைகள் ஆரம்பித்து விடும். 

டச்ஸ்கிரீன்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா? வராதா?

ஆகவே அத்தகைய பிரச்சனையில் இருந்து தள்ளி இருக்க வேண்டுமானால், தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)