சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் பால் பவுடர் பேஸ் பேக் !





சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் பால் பவுடர் பேஸ் பேக் !

0

பால் பவுடருடன் சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பல்வேறு விதமான பேஷியலை முயற்சி செய்யுங்கள். அது வளமான பொலிவை நமது முகத்திற்கு கொடுக்கும். 

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் பால் பவுடர் பேஸ் பேக் !
பாலை விடவும் இது சிறந்தது. ஏனெனில் பாலை விட பால் பவுடரில் சில ஊட்டச் சத்துக்களின் காம்பவுண்ட்டுகள் சேர்க்கப் பட்டிருக்கும். 

அது சருமத்தை மென்மைப்படுத்த உதவும். எண்ணெய் பசையான சருமம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் ஏற்ற முறை இது தான். 

மனைவியுடன் சென்ற மகனால் கண்ணீர் விடும் தாய் !

சருமத்தில் உள்ள எண்ணெய் பசை அதனால் உருவாகும் பருக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தின் நிறத்தைக் கூட்டும். 

ஒரு ஸ்பூன் பால் பவுடருடன் ஃபிரஷ்ஷாக எடுத்த எலுமிச்சை சாறினை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

அந்த கலவையை முகத்தை நன்கு கழுவி விட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் நன்கு அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்தபின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். 

வாரம் ஒரு முறை இந்த முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். சிறந்த ரிசல்ட்டை பெற்றிருப்பதை உணர்வீர்கள். 

ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் சில துளிகள் குங்குமப்பூவைச் சேர்த்து அதனுடன் பேஸ்ட் செய்வதற்கான சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். 

அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அதை அப்படியே அரை மணி நேரம் உலர விடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடுங்கள்.

தேவையான பொருட்கள் : .

பால்பவுடர் - 1 ஸ்பூன் 

அரிசி மாவு - 1 ஸ்பூன் 

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் 

ரோஸ் வாட்டர் - 1

அருமையான மும்பை ஸ்டைல் சாண்ட்விச் செய்வது எப்படி?

செய்முறை : .

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் பால் பவுடர் பேஸ் பேக் !

அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவிய பின்னர் இந்த பேக்கை உங்களுடைய முகம் கழுத்து எல்லா இடங்களிலும் நன்றாக அப்ளை செய்யவும். 

பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே விட்ட பின்னர் முகத்தை தண்ணீரில் லேசாக தேய்த்து கழுவுக் கொள்ளவும். நீங்களே எதிர்பாராத வகையில் முகம் பொழிவு பெற்றிருக்கும். 

யாராவது வந்தால் ஸ்டூல்ல ஏறி ஓட்ட வழியா பார்ப்பேன் ! 

வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது ஒரு நாள் விட்டு, ஒரு நாள், இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வரும் போது உங்களுடைய சருமத்தின் நிறம் கூடிக்கொண்டே இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)