சுவையான கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி?





சுவையான கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி?

0
நினைக்கும் போதே எச்சிலை வர வைக்கக் கூடிய அளவு சுவையான காம்பினேஷனில் இருக்கும் கத்தரிக்காய் தொக்கு எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
சுவையான கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி?
மேலும் கத்திரிக்காய் தொக்கு செய்து உண்ணும் போது ஏற்படும் சுவையின் அலாதியை வார்த்தையால் சொன்னால் தெரியாது. 
நீங்களும் செய்து அதை ஒன்று பார்த்த பின்பு கூறினால் அதனுடைய உண்மை என்ன என்பது உங்களுக்கும் தெரியும்.
 
நாம் செய்யப் போகும் இந்த கத்திரிக்காய் தொக்கு இட்லி சப்பாத்திக்கு மட்டுமல்ல சுடச்சுட வெள்ளை சோற்றுக்கும் சுவையைக் கூட்டி தரக்கூடிய வகையில் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி விரும்பி கேட்டு கேட்டு உண்பார்கள்.
 
அது போலவே பேச்சுலர்களும் எளிதில் செய்யக் கூடிய உணவு வகைகளில் ஒன்றாக இந்த கத்திரிக்காய் தொக்கையும் நாம் கூறலாம்.
தேவையான பொருட்கள் : .
 
கத்திரிக்காய் – 3 லிருந்து 4
 
எண்ணெய் – மூன்று தேக்கரண்டி
 
வெங்காயம் – சிறிது சிறிதாக நறுக்கியது ஒன்று
 
தக்காளி – இரண்டு
 
கறிவேப்பிலை  - தேவையான அளவு
 
மஞ்சள் தூள்  - ஒரு டீஸ்பூன்
 
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
 
புளிச்சாறு - சிறிதளவு 
 
தண்ணீர் - இரண்டு கப்
 
வெல்லம் - ஒரு சிறு துண்டளவு
 
உப்பு - தேவையான அளவு
செய்முறை  : .
சுவையான கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி?
வானொலியில் அடுப்பில் வைத்து எண்ணெய் இரண்டு ஸ்பூன் அதில் ஊற்றி நன்கு சூட ஏற்ற வேண்டும். எண்ணெய் சூடான பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் கருவேப்பிலையை சிறிதளவு உப்பு சேர்த்து பொன் நிறமாக வறுக்க வேண்டும்.

பொன் நிறமாக வறுத்த பின்பு இதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். 

இதனை அடுத்து கத்திரிக்காயை பொடி பொடியாக நறுக்கி வைத்திருப்பதை நன்கு கழுவி இதனோடு சேர்த்து கிளறி விட வேண்டும்.
அதனை அடுத்து தேவையான அளவு உப்பு மிளகாய் தூள் மஞ்சத்தூள் இவற்றை போட்டு கிளறுங்கள். நன்கு ஒரு கொதி வந்தபின் புளிச்சாற்றினை ஊற்றி கத்திரிக்காயை வேக விடவும்.
 
கத்திரிக்காய் நன்கு வெந்த பின்பு அதில் சிறிதளவு வெல்லத்தை சேர்த்து இறக்கினால் சுவையான கத்திரிக்காய் தொக்கு தயார்.
இந்த கத்திரிக்காயை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு புற்றுநோய் இதய சம்பந்தமான நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.
 
அது மட்டுமல்லாமல் கத்திரிக்காய்க்கு கொழுப்பை குறைக்கக் கூடிய சக்தி உள்ளதால் அடிக்கடி உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் அவர்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நலம் தரும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)